நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு - அமெரிக்கா வரவேற்பு.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்

இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003 ஆம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அதனை மீறி தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்ததால், இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது. இந்த சூழலில் சண்டை நிறுத்தத்தை உறுதியுடன் கடைபிடிக்க இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் தொலைபேசி வழியாக நடத்திய ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

அதில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் தற்போதை நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ள இருதரப்பு முக்கியப் பிரச்சனைகளை தீர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதி மொயீத் யூசுப் ஆகியோர் எல்லைகளில் அமைதியை உறுதி செய்வதற்காக கடந்த சில மாதங்களாக நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் வாயிலாகவே, இந்த சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானுடன் வழக்கமான நல்லுறவை பின்பற்ற இந்தியா விரும்புகிறது என்றும் இரு தரப்புக்கும் இடையிலான பிரச்னைகளை அமைதியான வழியில் பேசித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கி எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் சண்டை நிறுத்தத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன என்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டு அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது. 

இது தெற்காசியாவில் அதிக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சாதகமான ஒரு நிலையாகும். இது எங்கள் பொதுவான நலனுக்காகவும், இந்த முன்னேற்றத்தை வளர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!