நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

iPhone-ஐ ஏன் பயன்படுத்துவதில்லை? பில்கேட்ஸ் கூறும் சுவாரஸ்ய தகவல்

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரான பில்கேட்ஸ், தான் ஏன் ஐபோன்களை பயன்படுத்துவதில்லை என்ற தகவலை கிளப் ஹவுஸ் செயலியின் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் பல ஆண்டுகளாக உலக பணக்காரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். பின்னர், சமூக சேவை, அன்பளிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக அதிக நிதிகளை ஒதுக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானாக திகழும் அவர், அண்மையில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தன்னைப் பற்றிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, உலகின் மிகப்பெரும் தலைவர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஐபோன்களை, தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் சுமார் 1 பில்லியன் பேர் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், டெக் ஜாம்பவானான பில்கேட்ஸ், ஆன்டிராய்டு போன்களை மட்டுமே தன்னுடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார். கிளப்ஹவுஸ் (Clubhouse) எனும் செயலியின் நேர்காணலில் பங்கேற்ற அவரிடம், செல்போன்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பில்கேட்ஸ், தான் நாள்தோறும் ஆன்டிராய்டு போன்களை மட்டுமே அதிகளவு பயன்படுத்துவதாக தெரிவித்தார். எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டியிருப்பதால், அதற்கு ஐபோன்களை விட ஆன்டிராய்டு போன்களே சிறந்ததாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஐபோன் ஒன்று தன்னிடம் இருப்பதாக கூறியுள்ள பில்கேட்ஸ், அதனை அடிக்கடி பயன்படுத்துவதில்லை எனத் தெரிவித்தார்.

ஆன்டிராய்டு போன்கள் இயக்குவதற்கு எளிதாக இருப்பதாக கூறிய அவர், மைக்ரோசாப்ட் மென்பொருள்களை எளிதாக ஆப்ரேட் செய்யகூடியவகையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஐபோன்கள் பயன்படுத்துவதில் தனக்கு சிக்கல் இருப்பதாகவும் பில்கேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அதில் இருக்கும் இயக்க முறை கடினமானதாக இருப்பதாக கூறியுள்ளார்.

iOS14 வெர்சன் ஐபோன்கள், பில்கேட்ஸ் எதிர்பார்ப்பது போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள்களை எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய நண்பர்கள் பலரும் ஐபோன்கள் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள பில்கேட்ஸ், அவற்றில் தூய்மை இல்லை எனக் கூறியுள்ளார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பில்கேட்ஸ் பேட்டியளித்த கிளப்ஹவுஸ் செயலி, ஆப்பிள் ஐபோன்களில் மட்டுமே உள்ளது. ஆன்டிராய்டு வெர்சன் போன்களில் இந்த செயலி தற்போது இல்லை.

மிகப்பெரும் ஆளுமைகளை பேட்டி எடுத்துவருவதால் இந்த செயலி குறுகிய காலத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்கின்றனர். உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், இந்த செயலிக்கு 2 முறை பேட்டியளித்துள்ளார். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கருதுவதால் எண்ணற்றோர் அதிக விலை கொடுத்து ஐபோன் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில், பில்கேட்ஸ் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்