குரங்குகளை தேடும் ஆராய்ச்சியாளர்களைத் தெரியுமா? குரங்குகளின் பற்றாக்குறையால், மருத்துவ கண்டுபிடிப்புகள் முடங்குவது தெரியுமா? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? இதோ பதில்…
குரங்குகளை தேடும் ஆராய்ச்சியாளர்களைத் தெரியுமா? குரங்குகளின் பற்றாக்குறையால், மருத்துவ கண்டுபிடிப்புகள் முடங்குவது தெரியுமா? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? இதோ பதில்…
குரங்குகளைக் கண்டுபிடிப்பதில் மார்மிகவும் மும்முரமாக இருக்கிறார். ஏன் இருக்க மாட்டார்? உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, அதற்கான முடிவைத் தேடுவதில் அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறதே?
பயோகுவல் (Bioqual) நிருவனத்தின் தலைமை நிர்வாகி லூயிஸ், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற மருந்து நிறுவனங்களுக்கு ஆய்வக குரங்குகளை வழங்கும் பொறுப்பில் இருக்கிறார். கோவிட் -19 தடுப்பூசிகளை (COVID-19 vaccines) உருவாக்கும்போது, ஆய்வகத்தில் மருந்துகளை பரிசோதனை செய்துப் பார்க்க குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் அலை வீசியபோது உலகில் விசேஷமாக வளர்க்கப்பட்ட குரங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் செயல்முறையில் ஆய்வக விலங்குகளின் தேவை அதிகமானது. குரங்கு ஒன்றுக்கு 10,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செலவாகும் என்பதும் குறிப்பிடத்தகக்து. ஆனாலும் ஆய்வகக் குரங்குகளின் பற்றாக்குறை விஞ்ஞானிகளுக்கு பிரச்சனையாகின. சுமார் ஒரு டஜன் நிறுவனங்கள் தொற்றுநோய்க்கு மருந்து கண்டறியும் செயல்முறையில் ஆராய்ச்சி விலங்குகளுக்காக தேடிக் கொண்டிருந்தனர்.
"அவர்கள் குறிப்பிட்ட காலவரையறையில் விலங்குகளை வழங்க முடியாததால் எங்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டது" என்று லூயிஸ் கூறினார்.
COVID-19 தடுப்பூசிகளை உருவாக்க உலகிற்கு குரங்குகள் தேவை, அவற்றின் டி.என்.ஏ மனிதர்களுடன் ஒத்திருக்கிறது. ஆனால் தொற்றுநோயால் ஏற்பட்ட எதிர்பாராத தேவை அதிகரிப்பு, உலகளவில் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. ஆய்வக விலங்குகளை அதிக அளவில் சப்ளை செய்யும் சீனா, வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு சமீபத்தில் தடை விதித்தது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சமீபத்திய பற்றாக்குறை அமெரிக்காவில் ஒரு குரங்கு இருப்பை உருவாக்குவது பற்றிய சிந்தனைக்கு புத்துயிர் அளித்துள்ளது.
Comments
Post a Comment