நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனாவை தொடர்ந்து நாட்டில் புதிதாக முளைத்துள்ள பர்வோ வைரஸ்!

உத்தர பிரதேசத்தில் நாய்களை தாக்கும் பர்வோ என்ற வைரஸ் கான்பூரில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,

சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. 

இதற்கு மத்தியில் பறவை காய்ச்சல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவத்தொடங்கி  காகங்கள் இறந்துகிடந்தது.

இந்த நிலையில் இந்த பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது பர்வோ என்ற வைரஸ்  நாய்களுக்கு பரவத்தொடங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இதுவரை எட்டு நாய்கள் பர்வோ வைரஸுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறந்த எட்டு நாய்களின் பிரேதங்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் குடல் சிதைந்துவிட்டதாகவும், இறப்பதற்கு முன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

பர்வோ வைரஸ் உயிர்க்கொல்லி வைரஸ் மட்டுமல்லாமல் மிக வேகமாக பரவக்கூடியது. இந்த வைரஸ் நாய்களின் இரைப்பை மற்றும் குடலை தாக்கி பிரச்சினைகளை உண்டாக்குகிறது என கூறப்படுகிறது. உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட நாய் இறந்துவிடும் என்று கூறப்படுகிறது.

கான்பூரில் உள்ள பிதர்கோன், கியோந்தரா ஆகிய பகுதிகளில் மேற்கூறிய எட்டு நாய்களும் இறந்து கிடந்துள்ளன. இதே பகுதியில் சில வாரங்களுக்கு முன் மர்மமான முறையில் காகங்கள் இறந்துகிடந்தது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!