நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..!!!

நீங்கள் காணும் கனவுகளில் இந்த விஷயங்களை பார்த்தால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
கனவுகள் உங்களை மிகவும் பணக்காரனாக்கலாம். ஆம், நாம் அனைவரும் கனவு காண்கிறோம். ஒவ்வொரு கனவுக்கும் சில அர்த்தங்கள் உள்ளன. பல முறை நாம் கனவில் காணும் அனைத்தும் நனவாவதை கவனித்திருப்பீர்கள். உங்கள் கனவுகளில் இந்த விஷயங்களைக் கண்டால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்

வெற்று பாத்திரங்கள்- கனவுகளில் வெற்று பாத்திரங்களைக் கண்டால், அது மிகவும் சுபத்தை குறிக்கும் கனவாக கருதப்படுகிறது. கனவில் வெற்று பாத்திரங்களைப் கண்டால் நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்பதாகும்.

கனவில் எலி - உங்கள் கனவுகளில் ஒரு எலியை கண்டால், திடீரென்று பணம் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கனவில் எலியை பார்த்தால் ஏழ்மை விலகும் என கூறப்படுகிறது. உங்கள் கனவில் ஒரு எலியையைக் கண்டால், உங்கள் கனவை வீட்டிலுள்ள இளைய குழந்தைக்கு அதை பற்றி சொல்லுங்கள்.

விளக்குமாறு - விளக்குமாறு மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. உங்கள் கனவில் விளக்குமாறை பார்த்தால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த கனவு தொடர்பாக உங்கள் தாய் அல்லது வாழ்க்கை துணையிடம் அவசியம் கூறவும்.


மின்னணு பொருட்களைப் உடைந்து போவதைக் காண்பது - உங்கள் கனவில் எந்த மின்னணு பொருட்களையும் உடைந்து போவதை போல் பார்ப்பது நல்லதாக கருதப்படுகிறது. கனவுகளில் மின்னணு பொருட்கள் பார்ப்பது வறுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. அதே சமயம் அவை உடைந்து போவதை பார்ப்பது வாழ்க்கையில் வறுமையை நீங்குகிறது என அர்த்தம் ஆகும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்