நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த பெண்

ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த பெண் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
கேப்டவுன்

தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் ஒரு சிட்ரஸ் பண்ணையை நடத்தி வரும் வான் டெர் மெர்வே (32 வயது) என்ற பெண் ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெர்வே தனது கணவர் காதலர் தின வார இறுதியில் ஒரு விளையாட்டு பூங்காவில் வயதான ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாட 1,500 டாலர் செலவழித்து தனது ஐந்தாண்டு கனவை நினைவாகியுள்ளதாக என பேஸ்புக் பக்கத்தில் பெருமையாகக் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த சமூகதளவாசிகள் இப்பதிவை பார்த்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மெர்வே தனது 5வது வயதில் வேட்டையாடத் தொடங்கியுள்ளார். சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் யானைகள் உட்பட 500 விலங்குகளைக் கொன்றுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து வான் டெர் மெர்வே தெரிவிக்கையில், “நான் ஆண் ஒட்டகச்சிவிங்கிக்காக பல ஆண்டுகள் காத்திருந்தேன். நான் இதன் தோலை நேசிக்கிறேன். இது ஆப்பிரிக்காவுக்கு ஒரு சின்னமான விலங்கு.இது எனது கனவு என்பதை என் ஹெகார்ட் கணவர் அறிந்திருந்தார். 

எங்கள் திட்டங்கள் விரைவாக நடந்துள்ளது. நான் 2 வாரங்கள் ஒரு குழந்தையைப் போல இதற்காக காத்திருந்தேன், நாட்களை எண்ணினேன். உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கினேன். மேலும் கொல்லப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் தோலை ஒரு கம்பளமாகப் பயன்படுத்த போவதாக கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!