நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்ணைக் கொலை செய்து இருதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்துப் பரிமாறிய கொடுமை: அமெரிக்காவில் ‘ஹோமிசைட்’ பயங்கரம்.

கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான், தனக்கு ஜாமீன் வேண்டாம் என்று கெஞ்சினான். இப்போது மரண தண்டனை இவனுக்குக் காத்திருக்கிறது. இவனுக்கு மன்னிப்பு வழங்கி தண்டனையைக் குறைத்து பரோலில் அனுப்பியது எத்தனை பெரிய தவறு என்று வழக்கறிஞர்கள் கோர்ட்டில் வாதிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஆக்லஹோமா நகரில் தன் அண்டை விட்டுப் பெண்ணைக் கொலை செய்து அவரது இருதயத்தை எடுத்து உருளைக்கிழங்குடன் அதனை வதக்கி குடும்பத்தினருக்கு விருந்து பரிமாறிய கொடூரமான ஹோமிசைட் கொலைகாரர் கைது செய்யப்பட்டார்.

பிறகு தன் மாமா, மற்றும் மாமாவின் பேத்தியையும் கொன்றுள்ள இந்தப் பயங்கர குற்றவாளி செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட தனக்கு ஜாமீன் வேண்டாம் என்று கெஞ்சினார்.

பிப்ரவரி 9ம் தேதி நடந்த இந்தக் கொடூர கொலைகள் தினத்தன்று சிக்கஷாவில் உள்ள ஒரு பெண்ணை அவரது வீட்டில் வைத்து கொலை செய்த 42 வயது லாரன்ஸ் பால் ஆண்டர்சன், அவரது இருதயத்தை வெளியே எடுத்து அதை உருளைக்கிழங்குடன் வதக்கி தன் குடும்பத்துக்கு விருந்தாக்கியுள்ளார்.

ஆண்ட்ரியா லின் பிளாங்கென்ஷிப் என்பவதான் இந்தப் பரிதாபத்துக்குரிய பெண். இவரைக் கொலை செய்து இருதயத்தை எடுத்த பால் ஆண்டர்சன் நேராக தன் வீட்டுக்கு வந்துள்ளான். வந்து தன் மாமாவையும் அவரது பேத்தியையும் கொன்றுள்ளான்.

இது பற்றிய தகவல் கிடைக்க போலீஸார் வீடு வந்து பார்த்த போது 67 வயது மாமா இறந்து கிடந்தார். ஆனால் குழந்தை கேயோஸ் யேட்ஸ் காயமடைந்திருந்தார். குழந்தையும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்து போனது. இதோடு விடாமல் தன் அத்தை டெல்ஸி பை என்பவரையும் இரு கண்களில் கத்தியால் குத்தியுள்ளார் பால் ஆண்டர்சன். ஆனால் இவர் உயிர் பிழைத்தார்.

மிகப்பெரிய மூடநம்பிக்கையில் அண்டை வீட்டு பெண்ணைக் கொன்று அவரது இருதயத்தை உருளைக்கிழங்குடன் சமைத்து விருந்து பரிமாறியதற்குக் காரணம் வீட்டைப் பீடித்திருந்த பேய் பிசாசை விரட்டவே என்று தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளான் பால் ஆண்டர்சன்.

இவன் ஏற்கெனவே குற்றவாளிதான் இந்த ஆண்டு ஜனவரியில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். 2017-ம் ஆண்டு போதை மருந்து மற்றும் ஆயுத வழக்கில் இவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தண்டனையை கவர்னர் 9 ஆண்டுகளாகக் குறைத்தார். இவன் பரோலில் விடுதலையாகி தன் அத்தை மாமாவுடன் இருந்து வந்தான்.

கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான், தனக்கு ஜாமீன் வேண்டாம் என்று கெஞ்சினான். இப்போது மரண தண்டனை இவனுக்குக் காத்திருக்கிறது. இவனுக்கு மன்னிப்பு வழங்கி தண்டனையைக் குறைத்து பரோலில் அனுப்பியது எத்தனை பெரிய தவறு என்று வழக்கறிஞர்கள் கோர்ட்டில் வாதிட்டு வருகின்றனர்.

கொலைகளைச் செய்யும் போது போதைமருந்துக்கு ஆட்பட்டிருந்தானா என்பதையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்