தற்போது, சோலாப்பூர்-விஜயாப்பூர் நெடுஞ்சாலையின் 110 கி.மீ., பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 2021 க்குள் இந்த திட்டம் நிறைவடையும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) விஜய்பூர்-சோலாப்பூர் (என்.எச் 52) இடையே 25.54 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலையின் ஒரு வழிப்பாதையை, சாதனை அளவாக 18 மணி நேரத்தில் நிறைவு செய்துள்ளது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக படங்களுடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இத்தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Bengaluru-Chitradurga-Vijayapura-Solapur-Aurangabad-Dhule-Indore-Gwalior
இணைப்பு வழித்தடத்தின் ஒரு அங்கமாக இந்த சாலை போடப்பட்டிருப்பதாகவும். தேசிய நெடுஞ்சாலை எண் 52-ல் Vijaypur-Solapur பகுதிகளுக்கு இடையே 4 வழிப்பாதையின் ஒரு அங்கமாக ஒரு வழிப்பாதையில் 25.54 கிமீ தொலைவுக்கு 18 மணி நேரத்தில் சாலை போடப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களை பாராட்டியுள்ளார். “சுமார் 500 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த திட்டத்திற்காக கடுமையாக உழைத்தனர். இந்த ஊழியர்களுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட மேலாளர், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர், நிறுவனத்தின் அனைத்து பிரதிநிதிகள் மற்றும் திட்ட அலுவலர்களை வாழ்த்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
राष्ट्रीय राजमार्ग प्राधिकरण (@NHAI_Official) ने हाल ही में सोलापुर-विजापुर राजमार्ग पर 4-लेनिंग कार्य के अंतर्गत 25.54 किलोमीटर के सिंगल लेन डांबरीकरण कार्य को 18 घंटे में पूरा किया है, जिसे 'लिम्का बुक ऑफ रेकॉर्ड्स' में दर्ज किया जाएगा। pic.twitter.com/tP6ACFGblP
— Nitin Gadkari (@nitin_gadkari)
February 26, 2021
தற்போது, சோலாப்பூர்-விஜயாப்பூர் நெடுஞ்சாலையின் 110 கி.மீ., பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 2021 க்குள் இந்த திட்டம் நிறைவடையும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
18 மணி நேரத்தில் 25 கிமீட்டருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சாலை பணி லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment