நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முடக்குவாதத்தையும் மூட்டுவலியையும் நிச்சயம் குறைக்கும் முடவாட்டுக்கால் சூப்! தயாரிக்கும் முறை!

மூட்டுவலியால் முடங்கி கிடப்பவர்களை வேகமாக எழுந்து ஓட வைக்கும் அளவுக்கு செய்யகூடியது முடவாட்டுக்கால். முடவாட்டுக்கால் சூப் முடக்குவாதத்துக்கு தீர்வளிப்பதை தான் பார்க்க போகிறோம்.
முடக்குவாதத்தையும் மூட்டுவலியையும் நிச்சயம் குறைக்கும் முடவாட்டுக்கால் சூப்! தயாரிக்கும் முறை!


முடவாட்டுக்கால் சைவ ஆட்டுக்கால் சூப் என்று அழைக்கிறார்கள். முடவன் ஆட்டுக்கால் தான் முடவாட்டுக்கால் என்றழைக்கப்படுகீறது. இது தாவரத்தின் கிழங்கு ஆகும். மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடியது.

மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மீது மட்டுமே வளரக்கூடியது. இது கொல்லிமலையிலும் சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது. இந்த முடவாட்டுக்கால் கிழங்குங்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக்கூடிய இவை செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது.

சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் நோயை விரட்டை இதை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள்.

ஒரு கிலோ கிழங்கு 300 ருபாய்க்கு கிடைக்கும் இதை ஆறுமாதங்கள் வரை பக்குவமாக வைத்திருந்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் முடவாட்டுக்கால் சூப் செய்முறை குறித்து பார்க்கலாம்.

தேவையானவை

முடவாட்டுக்கால் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன் ( தேவையெனில்)
தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் ( தேவையெனில்)
சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப்
தக்காளி - பொடியாக நறுக்கியது அரை கப்
இலவங்கப்பட்டை - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

முடவாட்டுக்கால் ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் புறணியையும் நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும். இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர்விட்டு கொதிக்க விடவும். இது 20 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். பிறகு இறக்கி பூண்டு தட்டி போட்டு இதை சூப் போல் டம்ளரில் விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி குடிக்கவும்.

தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்துவந்தால் முடக்குவாதம், மூட்டுவலி பலன் கிடைக்கும்.

எலும்புக்கு நன்மைகள்

குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும். கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.

இதன் பெயரே சொல்லும் நோய் தீர்க்கும் தன்மையை . முடவன் ஆட்டும் கால் என்பதாகும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.

நாள்பட்ட மூட்டுவலி அது உடலில் எங்கு இருந்தாலும் அதன் வலி மேலும் தீவிரமாகமால் தடுக்க இந்த சூப் உதவும். இது உணவாக எடுத்துகொள்வதால் பக்க விளைவுகள் கிடையாது.

இன்று இளவயதிலேயே மூட்டு வலியை எதிர்கொள்பவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் மூட்டு வலி வராமலே தவிர்க்க முடியும்.

இந்த சூப் கடுமையான மூட்டுவலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் சதை இழுத்தல், உடலில் உண்டாகும் வலி,அசதி, தசைபிடிப்பு போன்ற அனைத்துமே சரியாகும். முடவாட்டுக்காலின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தனி கட்டுரையாக பார்க்கலாம்.

எல்லாம் சரி முடவாட்டுக்கால் எங்கு கிடைக்கும் என்கிறீர்களா? கொல்லி மலைபகுதிகளில் கிடைக்கும். சமீப காலமாக இது பல இடங்களில் கிடைக்கவும் செய்கிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!