நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடுப்பு இல்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் ஒரு உணவகமா..? அசத்தும் படையல் இயற்கை உணவகம்..

இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர்.
ஹோட்டல் என்றாலே ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்கிற எண்ணம்தான் பலரது மனதிலும் உள்ள அச்சம். அது சுவைக்காக மட்டுமேயன்றி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதும் பலரது கூற்று. ஆனால் அவற்றை இன்றைய இளைஞர்கள், பாரம்பரிய உணவுகள் மீது பற்றுகொண்ட சமூக ஆர்வலர்கள் வீட்டை விட ஆரோக்கியமான உணவுகளை அறிமுகப்படுத்தி அசத்துகின்றனர். அவர்களின் அந்தப் படைப்புகள் மக்களை ஆச்சரியப்படுத்துவது மட்டுமன்றி இதுபோன்ற உணவுகளை எவ்வளவு விலையானாலும் சாப்பிடலாம் என நினைக்கும் அளவுக்கு செய்துவிடுகின்றனர்.

அந்த வகையில் கோயம்பத்தூரில் அடுப்பில்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. அதன் பெயர் 'படையல் இயற்கை உணவகம்’. இது உலகின் முதல் அடுப்பில்லா உணவகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவகம் கோவையைச் சேர்ந்த படையல் சிவா என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.


இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர். இவர்களின் உணவில் பூக்கள், நாட்டுக் காய்கறிகள்தான் அதிகமாகப் பயன்படுத்துக்கின்றனர். மசாலா என்றால் மிளகு, சீரகம் மற்றும் உப்புதான் பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.

இங்கு தயிர் சாதம் மிகவும் ஸ்பெஷல். அதாவது இங்கு சாதாரணமாக பாலிலிலிருந்து தயாரிக்கும் தயிரைக் காட்டிலும் தேங்காய் பாலை 12 மணி நேரம் ஊற வைத்து தயிராக்கி அதை தயிர் சாதமாக செய்கின்றனர். அதில் கூடுதல் சுவைக்கு மாதுளை கேரட் போன்றவற்றையும் கலந்து செய்கின்றனர்.

அரிசி வகைகளிலும் திணை வகைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். இங்கு காலை உணவுகள் அனைத்துமே ஒரு பிளேன் 30 ரூபாய் என விற்கப்படுகிறது. டீ வகைகளிலும் மூலிகை டீ தான். சங்குப்பூ டீ, செம்பருத்தி டீ போன்ற டீ வகைகள் கிடைக்கின்றன. அதோடு அதில் மில்க் ஷேக்குகளும் பாதாம் , நட்ஸ் பயன்படுத்தி செய்கின்றனர். பார்சல் முறையும் இங்கு உண்டு. பார்சலுக்கும் பாக்கு மட்டை தட்டும், அதை பேக் செய்ய வாழையிலை நார் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி எங்கும் சமரசம் செய்துகொள்ளாமல் முழுக்க முழுக்க இயற்கையை மட்டுமே நம்பி இந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு சாப்பிடும்போது மனம் நிறைவடைவதாக வாடிக்கையாளர்கள். தெரிவிக்கின்றனர். இதை மேலும் நல்ல முறையில் பெரிய அளவில் கொண்டு சென்றால் மற்ற கமர்ஷியல் உணவகங்களைப் போல் இதிலும் லாபம் பார்க்கலாம் என்கிறார் படையல் சிவா .


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!