நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Hair Donation: தலைமுடியிலா அழகு இருக்கிறது? கேள்வி எழுப்பும் முடிதானம் செய்த Dancer

ஹைதராபாத்தைச் சேர்ந்த குச்சிபுடி நடனக் கலைஞர் புற்றுநோய் நோயாளிகளுக்காக தனது நீண்ட தலைமுடியை நன்கொடையாக வழங்கி, சமூக ஊடகங்களில் வைரலாகிறார். 
ஹைதராபாத்:

 ‘கூந்தலில் அழகு இருக்கிறது என்று சொன்னது யார்? அது பொய், மிகவும் தவறானது’ என்று நிரூபித்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த குச்சிபுடி நடனக் கலைஞர். புற்றுநோய் நோயாளிகளுக்காக தனது நீண்ட தலைமுடியை நன்கொடையாக வழங்கியதற்காக சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

கதிர்வீச்சு (radiation) மற்றும் கீமோதெரபி (chemotherapy) காரணமாக புற்றுநோய் நோயாளிகள் தலைமுடியை இழக்கிறார்கள். 

ஸ்ரவ்யா மனசா போகிரெட்டி என்ற நடனக் கலைஞர் தனது தலைமுடியை தானம் கொடுத்து ’அழகு என்பது உதிரும் தலைமுடியில் இல்லை’ என்று உணர்த்தியிருக்கிறார். 

பயிற்சி பெற்ற தொழில்முறை நடனக் கலைஞரான ஸ்ரவ்யா, பி.டெக் மற்றும் எம்.டெக் படித்தவர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றவர்.

தனது தலைமுடியை தானம் செய்த ஸ்ரவ்யா, பேஸ்புக்கில், தனது மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். “எனது தலைமுடியில்லா தோற்றத்துக்கு வணக்கம் சொல்லுங்கள்.  யாராவது ஒருவருக்கு பயனளிக்கும் என்ற எண்ணத்தில் கொடுத்திருக்கிறேன். Hyderabad Hair Donationக்கு நன்கொடை கொடுத்திருக்கிறேன். ‘அழகு கூந்தலில் இருப்பதாக சொல்வதுபொய், யார் அப்படி சொன்னாலும் அது மிகவும் தவறு. இது மிகவும் அழகாக இல்லையா!!! ” என்று கேட்டுள்ளார். 

மொட்டையடித்த தலையுடன் நடனமங்கையின் புகைப்படத்தைப் பார்த்த சமூக ஊடக பயனர்கள் அவரது புதிய தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர், ஆனால் அதே நேரத்தில் அவளுடைய முயற்சிகளையும், அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் கடும் முயற்சியையும் பாராட்டினர்கள். 

ஸ்ராவ்யா தனது தலைமுடியை ஹைதராபாத் ஹேர் நன்கொடை என்ற லாப நோக்கற்ற அமைப்புக்கு தனது முடியை நன்கொடையாக அளித்தார்.

ஸ்ரவ்யாவுக்கு நன்றி தெரிவித்த அந்த அமைப்பு, “ஒரு கிளாசிக்கல் டான்சராக இருப்பதால் புற்றுநோய் நோயாளிகளுக்கு முடியை தானமாக வழங்குவதற்காக மொட்டையடித்துக் கொண்டது மிகப் பெரிய விஷயம். கீமோதெரபி செய்யப்படும் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்கான உங்கள் முயற்சிகளை பாராட்டுகிறோம்” என்று புகழாரம் சூட்டியது.

புற்றுநோய் காரணமாக கீமோதெரபிக்கு முடி இழந்தவர்களுக்கு இந்த அமைப்பு விக் மற்றும் இலவச முடியை நன்கொடையாக அளிக்கிறது. நாள்தோறும், 40 முதல் 50 பேர் தங்கள் தலைமுடியை இந்த அமைப்புக்கு தானம் செய்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்