சிக்கன் பார்பிக்யூ கடையில் வெயிட்டராக பணிபுரியும் நம்பிக்கை நட்சத்திரம்.. வைரலாகி ஹிட்டடிக்கும் கலக்கல் டான்ஸ்..
- Get link
- X
- Other Apps
அண்மையில், வாடிக்கையாளர்களுக்காக பாகி (Bhaagi) திரைப்படத்தில் உள்ள ‘Girl I Need You’ என்ற பாடலுக்கு அவர் அடிய டான்ஸ் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
கவுகாத்தியில் பார்பிக்யூ சிக்கன் கடையில், வெயிட்டர் ஒருவர் ஆடும் ரோபோடிக் டான்ஸ் கஸ்டமர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோ இணையதளத்திலும் வைரலாகியுள்ளது. திறமைக்கு எங்கிருந்தாலும் மதிப்பு உண்டு. தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட ஒருவர் தயங்காதபோது, அவரை சமூகமும் அங்கீகரிக்க தவறாது என்பது கவுகாத்தி பார்பிக்யூ சிக்கன் கடையில் பணியாற்றும் வெயிட்டர் மூலம் மீண்டும் ஒருமுறை நிதர்சனமாகியுள்ளது.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான சுராஜித் (Surajit) கவுகாத்தியில் உள்ள அப்சலூட் பார்பிக்யூ (‘Absolut Barbecue’) கடையில் வெயிட்டராக பணியாற்றி வருகிறார். டான்ஸ் மீது அலாதி பிரியம் கொண்ட அவர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தனது டான்ஸ் மூலம் அசரவைத்து வருகிறார். அண்மையில், வாடிக்கையாளர்களுக்காக பாகி (Bhaagi) திரைப்படத்தில் உள்ள ‘Girl I Need You’ என்ற பாடலுக்கு அவர் அடிய டான்ஸ் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
சுராஜித் 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். குடும்ப ஏழ்மையால் வேலை தேடி அலைந்த அவர் கவுகாத்தியில் செட்டிலாகியுள்ளார். சிறுவயதில் இருந்து டான்ஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், பணி நேரங்களை தவிர மற்ற நேரங்களில் யூ டியூப் வீடியோக்களை பார்த்து டான்ஸ் கற்றுக்கொண்டுள்ளார். அப்போது, வெஸ்டர்ன், பாப், லாக்கிங் உள்ளிட்ட மூவ்களை கற்றுக்கொண்ட அவர், பணிநேரத்தின்போது கிடைக்கும் சந்தர்பங்களில் தனது டான்ஸ் திறமையை வெளிக்காட்டி வாடிக்கையாளர்களை மகிழ்த்துவருகிறார்.
டான்ஸ் வகுப்புகளில் சேர்ந்த நன்கு பயிற்சி பெற்றவருக்கு மேலாக அவரது டான்ஸ் மூவ்கள் இருப்பதால், பலரும் அவரது திறமையை பாராட்டி வருகின்றனர். இவ்வளவு திறமையை வைத்திருக்கும் அவர் ஏன் இன்னும் பார்பிக்யூ சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார்? ஏதாவது தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் முதல் பரிசைக் கூட அவரால் வெல்ல முடியும் என நெட்டிசன்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இது குறித்து பேசிய சுராஜித், தனக்கும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், சிக்கன் கடையில் டான்ஸ் ஆடுவது பற்றி பேசும்போது, கடையில் வேலை பார்க்கும்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் டான்ஸ் மூவ்களை ஆடி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பேன் எனக் கூறினார். நாளடைவில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தன்னை டான்ஸ் ஆடுமாறு கேட்டுக்கொள்வார்கள், அவர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுவேன் எனக் கூறிய சுராஜித், தன்னுடைய டான்ஸ் இணையத்தில் வைரலாகும் என ஒருபோதும் நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க இருப்பதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
Also read : கை நரம்புகளை வைத்தே அடையாளம் காணும் தொழில்நுட்பம்: ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment