இத்தகைய கொலைகளின் அதிகரிப்பு ஹோமிசைட் தொடர் கொலையாளியின் வேலையாக இருக்குமோ என்று பல கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புனேயில் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சனிக்கிழமை காலை அதிர்ச்சிக் காத்திருந்தது, தொண்டை அறுக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் உடல் ஒன்று கிடந்ததே அவர்கள் அதிர்ச்சிக்குக் காரணம்.
நேஷனல் கெமிக்கல் சோதனைச்சாலையில் பி.எச்டி ஃபெலோஷிப்பில் இருந்த சுதர்ஷன் என்ற 30 வயது நபரின் உடல்தான் அது. புனேயின் சுஸ் என்ற கிராமத்தில் மலைசார்ந்த பகுதியில் அவரது உடல் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தது. நடைப்பயிற்சி செய்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். அப்போது மாணவரின் தொண்டை அறுக்கப்பட்டிருப்பதையும் முகம் சிதைக்கப்பட்டிருப்பதையும் கண்டனர். அடையாளத்தை மறைக்க முகத்தை கல்லைக் கொண்டு சிதைத்துள்ளனர்.
ஆனால் சுதர்சனின் பாக்கெட்டில் அடையாள அட்டை இருந்ததையடுத்து எளிதாகப் போனது. உடலும் அரை நிர்வாண நிலையில் இருந்தது.
ரசாயனத்தில் முனைவர் பட்டம் பெற ஒன்றரையாண்டுகளுக்கு முன்பு நேஷனல் கெமிக்கல் சோதனைச்சாலையில் சுதர்சன் பதிவு செய்து கொண்டார். இவர் திருமணமாகாதவர் சுதர்வாதி பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
என்.சி.எல் சி.எஸ்.ஐ.ஆர் என்ற மதிப்பு மிக்க அமைப்புடன் இணைந்தது, இங்கு பி.எச்.டி படிப்பது அவ்வளவு எளிதல்ல. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அறிவியல் கழகமாகும் இது.
இந்நிலையில் மாணவர் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு பெரிய தலைவலியாகியுள்ளது, விசாரணையை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.
கொலைக்கான காரணமும் தெரியவில்லை. சத்து ஷ்ரிங்கி காவல்நிலையக் குற்றப்பிரிவு ஆய்வாளர் தாதா கெய்க்வாட் இந்த கொலை விசாரணையை நடத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட மர்ம மரணம் புதிதல்ல. ஜூலை 2017-ல் இதே போல் 37 வயது நபர் ஒருவரின் உடல் புதுடெல்லியின் நரேலாவில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தது.
இந்தக் கொலையிலும் கொலையானவர் தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. முகம் சிதைக்கப்பட்டிருந்தது. கொலை சரி ஏன் அடையாளம் மறைக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் இத்தகைய கொலைகளின் அதிகரிப்பு ஹோமிசைட் தொடர் கொலையாளியின் வேலையாக இருக்குமோ என்று பல கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புனே, மும்பை என்றில்லை, மகாராஷ்டிராவில் பொதுவாக சட்டம் ஒழுங்கு நிலமைகள் மோசமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Comments
Post a Comment