நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவின் கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி வாங்க பிரேசில் ஒப்பந்தம்.

இந்தியாவின் கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.
சாவோ பாலோ, 

உலகில் கொரோனா தொற்றால் உயிரைப் பறிகொடுத்தோர் எண்ணிக்கையில் 2-வது இடத்தில் இருக்கும் நாடு, பிரேசில். அங்கு கொரோனா பலி எண்ணிக்கை நேற்று முன்தினம் 2.50 லட்சத்தை தொட்டது. அதே நாளில், இந்தியாவின் பாரத் பயோடெக் மருந்து நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கோவேக்சின் தடுப்பூசிகளை பெறுவதற்கு பிரேசில் சுகாதார அமைச்சகம் ஒப்பந்தம் போட்டது.

பிரேசில் மருந்து உற்பத்தி நிறுவனமான பிரெசிஸ்கா மெடிகமென்டோஸ் தயாரிக்கும் 80 லட்சம் தடுப்பூசிகள் மார்ச் மாதத்தில் கிடைக்கும். இரண்டாவது கட்டமாக ஏப்ரல் மாதத்தில் 80 லட்சம் தடுப்பூசிகளும், மே மாதத்தில் மேலும் 40 லட்சம் தடுப்பூசிகளும் கிடைக்கும் என பிரேசில் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் உடனான பிரேசிலின் ஒப்பந்தம் குறித்து அந்நிறுவனமோ, பிரெசிஸ்கா மெடிகமென்டோஸ் நிறுவனமோ உறுதி செய்யவில்லை.

20.1 கோடி மக்கள்தொகை கொண்ட பிரேசிலில், இதுவரை 4 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிதடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அந்நாட்டில் சில நகரங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது கடந்த வாரம் நிறுத்தப்பட்டது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!