நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உடையவர்களுக்கும் இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி.. இணைநோய் பட்டியல் இங்கே..

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோயுடன் இருந்தால், அவர்களும் cowin செயலியில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 01.03.2021 - இன்றுமுதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிபோடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு, முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 பயனாளிகள், Cowin செயலியைப் படுன்படுத்தி, cowin.gov.in-இல் மொபைல் நம்பரை உள்ளிடவும். கணக்கு தொடங்குவதற்கான ஓடிபி எண் கிடைத்தவுடன், அதை உள்ளிட்டு பெயர், வயது, பாலினம், அடையாள அட்டையை உள்ளிடவும். வாக்காளர் அட்டை, பான் அட்டை, ஆதார் அல்லது பென்ஷன் ஆவணத்தை அடையாளமாக பயன்படுத்தலாம். 45 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், இணை நோய் இருப்பதற்கான சான்றையும் உள்ளிடவும். தடுப்பூசி மையத்தையும், தேதியையும் தேர்வு செய்துகொள்ளவும். ஒரு மொபைல் எண்ணில் 4 அப்பாய்ட்மெண்ட்கள் வரை பதிவுசெய்ய முடியும். பதிவு செய்யாதவர்கள் நேரில் சென்றும் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோயுடன் இருந்தால், அவர்களும் cowin செயலியில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இணை நோய்க்கான ஆவணத்தையும் பதிவு செய்யவேண்டும். இணை நோயின் பட்டியல் இங்கே..




1 Heart Failure with hospital admission in past one year

2 Post Cardiac Transplant/Left Ventricular Assist Device (LVAD)

3 Significant Left ventricular systolic dysfunction (LVEF <40%)

4 Moderate or Severe Valvular Heart Disease

5 Congenital heart disease with severe PAH or Idiopathic PAH

6 Coronary Artery Disease with past CABG/PTCA/MI
AND Hypertension/Diabetes on treatment

7 AnginaANDHypertension/Diabetes on treatment

8 CT/MRI documented stroke AND Hypertension/Diabetes on treatment

9 Pulmonary artery hypertension AND Hypertension/Diabetes on treatment

10 Diabetes (> 10 yearsORwith complications) AND Hypertension on treatment

11 Kidney/ Liver/ Hematopoietic stem cell transplant: Recipient/On wait-list

12 End Stage Kidney Disease on haemodialysis/ CAPD

13 Current prolonged use of oral corticosteroids/ immunosuppressant medications

14 Decompensated cirrhosis

15 Severe respiratory disease with hospitalizations in last two years/FEV1 <50%

16 Lymphoma/ Leukaemia/ Myeloma

17 Diagnosis of any solid cancer on or after 1st July 2020 ORcurrently on any cancer therapy

18 Sickle Cell Disease/ Bone marrow failure/ Aplastic Anemia/ Thalassemia Major

19 Primary Immunodeficiency Diseases/ HIV infection

20 Persons with disabilities due to Intellectual disabilities/ Muscular Dystrophy/ Acid attack with involvement of respiratory system/ Persons with disabilities having high support needs/ Multiple disabilities including deaf-blindness

முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட 29 வது நாள் முதல் 42 நாளுக்கு இடைப்பட்ட வேளையில் 2-வது தவணை போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்