நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மீதமாகும் கோஸ் இலைகள் குப்பைக்குத்தான் போகுதா..? இப்படியெல்லாம் மீண்டும் பயன்படுத்தலாம் தெரியுமா..?

கோஸ் சமையலுக்குப் பயன்படுத்தும்போது முதல் இரண்டு இலைகளை எடுத்துவிட்டுதான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். அந்த தேவையில்லை என நினைக்கும் கோஸ் இலைகளை இனி குப்பையில் எறியத் தேவையில்லை.


கோஸ் ரோல் : 

ஸ்பிரிங் ரோல்தான் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடும். வீட்டிலும் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு அதிக எண்ணெய் தேவைப்படும். மைதா மாவில்தான் செய்ய வேண்டும். இதனால் சில ஆரோக்கியமற்ற விஷயங்களும் உள்ளன. எனவே இதற்கு மாற்றாக நீங்கள் கழித்த இலைகளை நன்கு அலசி சுடு தண்ணீரில் அலசி பாக்டீரியாக்கள் இல்லாமல் சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின் நீங்கள் நினைக்கும் ஸ்டஃபை அதில் வைத்து ரோல் செய்து ஆவி கட்டி சாப்பிடலாம் அல்லது தவாவில் சுட்டும் சாப்பிடலாம். சுவையும் அருமையாக இருக்கும்.

கோஸ் ஊறுகாய் : 

ஆம் சீனர்களின் பிரபலமான ஊறுகாய். இதை எளிமையாக செய்யலாம். வீட்டில் கண்ணாடி பாட்டில் இருந்தால் அதில் சமையல் எண்ணெய் , மிளகாய் தூள், இடித்த பூண்டு , இஞ்சி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின் கோஸை நீளவாக்கில் சீவி அதில் போட்டு கலந்துகொள்ளுங்கள். அதை அப்படியே 3 நாட்கள் வரை திறக்காமல் நன்கு மூடி வையுங்கள். பின் எடுத்து சுவைத்துப்பாருங்கள். அதற்கு நிகர் எதுவுமில்லை என்பீர்கள்.

தூவுவதற்கு : 

கோஸும் வெங்காயம் போன்றதுதான். எந்த உணவுக்கும் டாப்பிங் போல் தூவி சாப்பிடலாம். அப்படி மோமோஸ், சாண்ட்விட்ச், சன்னா மசாலா இப்படி எது சாப்பிட்டாலும் அதில் இந்த கோஸை சீவி தூவி சுவைத்துப்பாருங்கள். அருமையான சுவை கிடைக்கும்.

சருமத்திற்கும் பயன்படுத்தலாம் : 

கோஸில் நார்ச்சத்து, பொட்டாசியம். மெக்னீசியம், விட்டமின் ஏ மற்றும் கே ஆகியவை நிறைவாக உள்ளன. இவை சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே கோஸ் இலையை நன்கு அலசி சுத்தம் செய்து அதை ஃபிரிட்ஜில் சேமித்து வையுங்கள். நீங்கள் மிகவும் சோர்வாகவும், சருமம் பொலிவிழந்தது போல் உணர்ந்தால் இந்த கோஸ் இலைகளை ஃபேஸ் மாஸ்க் போல் முகத்தில் ஒட்டிக்கொண்டு ரிலாக்ஸாக ஓய்வு எடுக்கலாம்.

தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் : 

கோஸை நன்கு அலசி அதை மிக்ஸியில் மைய அரைத்து 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு பிழிந்து பின் அதை வேர்களில் படும்படி தடவி 15 நிமிடங்கள் கழித்து தலையை அலசுங்கள். இதனால் தலை முடி வறட்சி, பொடுகுத்தொல்லை இருக்காது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!