அவசரத்துக்கு வாங்கும் கடனுக்காக அளவுக்கு அதிகமாக வட்டி செலுத்த வேண்டியிருக்கலாம். இவ்வாறு வாங்கும் கடனில் பல சூட்சுமங்கள் உள்ளன. ஆக நீங்கள் கடன் வாங்கும் முன் இதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓரு பர்சனல் லோனை வாங்க எந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும். இது யாருக்கெல்லாம் பொருந்தும்.
இந்த கடன் வாங்கும் முன் நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கிரெடிட் ஸ்கோரை பாரமரியுங்கள்
இன்றைய காலகட்டத்தில் பர்சனல் லோன் மட்டும் அல்ல, எந்த கடன் வாங்க திட்டமிட்டாலும், அதற்கு முதலில் வங்கிகள் பார்ப்பது கிரெடிட் ஸ்கோரைத் தான். ஆக நீங்கள் கிரெடிட் ஸ்கோர் சரியாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த கடன் வாங்கினாலும் சரியான நேரத்தில் செலுத்த பழகிக் கொள்ளுங்கள். உங்களது சிபில் ஸ்கோர் 300 - 900 வரை இருக்கும். அதில் உங்களது சிபில் ஸ்கோர் 750 மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் என்பது மோசமான கடன் நிர்வாகத்தினையே காண்பிக்கும். இதனால் கடனே கிடைத்தாலும், வங்கிகள் உங்களுக்கு அதிக வட்டி விதிக்கலாம்.
வட்டி வீதத்தினை ஒப்பிட்டு பாருங்கள்
உங்களது வட்டி வீதத்தினை மற்ற வங்கிகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். இதனை பைசா பஜார், பேங்க் பஜார், மை லோன் கேர் உள்ளிட்ட தளங்களில் பார்க்கலாம். ஆக அதனை ஒப்பிட்டு பார்த்து அதன் பிறகு உங்களுக்கு ஏற்ற ஒன்றினை தேர்வு செய்யலாம்.
எவ்வளவு கடன் வேண்டும்?
உங்களுக்கு அதிகளவு கடன் கிடைக்கும் என்றாலும், உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதனை மட்டும் வாங்குகள். கிடைக்கிறது என்று அதிகளவில் வாங்கி விட்டு பின்னாளில் மிக கஷ்டப்பட வேண்டாம். அதே போல மாத மாதம் இஎம்ஐ செலுத்துவது போல திட்டமிடலாம். சில நேரங்களில் வங்கிகள் சலுகைகளை அறிவிக்கும். அந்த மாதிரியான சலுகைகளுக்காகவே கடன் வாங்க கூடாது. தேவையிருக்கும் பட்சத்தில் கடன் வாங்கலாம். இல்லையேல் தவிர்ப்பது நல்லது.
பர்சனல் லோனுக்கு வட்டி அதிகம்
வங்கிகளில் பர்சனல் லோனுக்கு விதிக்கப்படும் 9.50% முதல் 22% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் பல நேரங்கள் வட்டி விகிதம் குறைவும் என்று தான் நாம் இந்த வலையில் சிக்குகின்றறோம். இந்த கடன்களுக்கு உத்தரவாதமாக எதனையும் வங்கிகள் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால், இதற்கு அதிக வட்டி விதிக்கின்றன. அதெல்லாம் சரி இதுபோன்ற எந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பர்சன்ல் லோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டும், வாருங்கள் பார்க்கலாம்.
பர்சனல் லோனுக்கு செயல்பாட்டுக் கட்டணம்
பர்சனல் லோனுக்கு 5% வரை பிராசசிங் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த பர்சனல் லோன்கள் திட்டமிடாத சூழ்நிலைகளுக்காகவே அல்லது அவசரத் தேவைக்காகவோ பர்சனல் லோன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவசரமான காலகட்டத்தில் கூட ஃபிக்சட் டெபாசிட்டை முன்கூட்டியே எடுக்கவோ அல்லது கையிலிருக்கும் தங்கத்தை விற்கவோ பலரும் தயங்குகிறார்கள். ஆனால் பர்சனல் லோன் வாங்குவதற்கு பதிலாக இவற்றை பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடனுக்கு கடன் வாங்கி செலுத்துவதா?
ஏனெனில் இதற்கு வட்டியும் குறைவு. திரும்ப செலுத்துவதும் எளிது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் செய்யும் தவறே இது தான். அதாவது ஒரு கடனை செலுத்த மற்றொரு கடன் வாங்குவது தான். இது ஒரு மோசமான திட்டம். இதனால் மேலும் நீங்கள் கடன் வலையில் சிக்கிக் கொள்வீர்கள். நீங்கள் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த இது நிரந்தர தீர்வு கிடையாது.
Comments
Post a Comment