இனி சப்பாத்தி மாவு பிசையவோ, உருட்டவோ வேண்டாம்... புஸ் புஸ் சப்பாத்தி ரெடி..! ரகசியம் தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க..!
- Get link
- X
- Other Apps
இதேபோல் நீங்களும் உங்கள் வீட்டில் அடுத்த முறை டிரை பண்ணி பாருங்க....
சப்பாத்தி சுட வேண்டும் என்றாலே அது லாங் பிராசஸ் என்றுதான் பலருக்கும் தோன்றும். அதாவது அதை பக்குவமாக பிசைந்து, உருட்டி பின் சுட்டு எடுத்து என வேலை அதிகமாக இருக்கும். இதற்காக சப்பாத்தி மாவு பிசைய மிஷின், அதை உருட்ட ஒரு மிஷின் என எல்லாம் வந்தது. ஆனால் எதுவும் எடுபடவில்லை. இதனாலேயே சிலர் சப்பாத்தி சாப்பிட பிடித்தாலும் சமைக்க தவிர்த்துவிடுவார்கள். இனியும் நீங்கள் அப்படி செய்ய வேண்டாம். சுலபமான ஒரு வழி கிடைத்துவிட்டது.
ஆம்... சப்பாத்தி சுட வேண்டும் என நினைத்தால் கோதுமை மாவை இட்லி மாவு போல் உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். வேண்டுமென்றால் உங்களுக்கு பிடித்த கார்லிக் பராடா, மிண்ட் பராடா என பிடித்த வகைகளையும் சேர்த்து மாவை கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் தோசை கல் வைத்து எண்ணெய் ஒட்டியும் ஒட்டாமலும் தடவிக்கொள்ளுங்கள். அதிக எண்ணெய் தடவினால் மாவு வட்டமாக சுட முடியாது. தோசைக் கல் நன்கு காய்ந்ததும் கெட்டியான ஒரு கரண்டி மாவை எடுத்து வட்டமாக கெட்டிப் பதத்தில் ஊற்றுங்கள். பின் அதை சுற்றிலும் எண்ணெய் ஊற்றுங்கள். மேற்புறம் மாவு முற்றிலும் கலர் மாறியதும் லாகவமாக அதை திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு கரண்டியால் அழுத்தி விடுங்கள். சுற்றிலும் சப்பாத்திக்கு அழுத்துவது போல் அழுத்த வேண்டும். பின் மறுபுறமும் திருப்பிப் போட்டு அழுத்த வேண்டும். ஸ்டவ்வின் தீ மிதமாக இருக்க வேண்டும். இப்படி மாறி மாறி திருப்பிப் போட சப்பாத்தி போல் உப்பி வரும். நன்கு சப்பாத்தி பதத்திற்கு வந்ததும் எடுத்துவிடவும். அவ்வளவுதான் இப்படி ஒவ்வொன்றாக சுட்டு எடுங்கள்.. சப்பாத்தியும் ரெடி... உங்கள் வேலையும் மிச்சம்.
இதை நீங்கள் வீடியோவாகக் காண இதோ....
இதேபோல் நீங்களும் உங்கள் வீட்டில் அடுத்த முறை டிரை பண்ணி பாருங்க....
Also read : மீதமாகும் கோஸ் இலைகள் குப்பைக்குத்தான் போகுதா..? இப்படியெல்லாம் மீண்டும் பயன்படுத்தலாம் தெரியுமா..?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment