நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மைக்கேலேஞ்சலோ சிற்பத்தின் நகல்: இத்தாலியில் இருந்து துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வளாகத்துக்கு வருகை

துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில் இத்தாலி நாட்டு அரங்கத்தில் இடம் பெறுவதற்காக முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் உருவாக்கப்பட்ட உலக புகழ்பெற்ற மைக்கேலேஞ்சலோ சிற்பத்தின் நகல் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
டேவிட் சிலை

உலக புகழ்பெற்ற சிற்பக்கலைஞர் மைக்கேலேஞ்சலோவிற்கு பெரும் புகழை சேர்த்த சிற்பம் டேவிட் சிலை ஆகும். ஓர் உருக்குலைந்து போன பளிங்கு கல்லில் இருந்து அவர் வார்த்தெடுத்த அற்புத சிற்பம்தான் அந்த டேவிட் சிலை. அந்த சிலையை உருவாக்க அவருக்கு 18 மாதங்கள் தேவைப்பட்டன. இன்னும் இத்தாலி நாட்டின் அரிய பொக்கிஷங்களில் அந்த சிற்பம் முக்கிய இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த சிலையை அச்சில் வார்த்தது போன்று முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் அங்குள்ள உண்மையான டேவிட் சிலை 40 மணி நேரம் ஸ்கேன் செய்யப்பட்டு தற்போது 450 கிலோ எடை கொண்ட அந்த சிற்பத்தின் நகல் அச்சு அசலாக ‘அக்ரெலிக் ரெசின்’ என்ற பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உண்மையான சிலையில் காணப்படும் விரிசல் கூட தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

துபாய்க்கு வருகை
தற்போது இத்தாலியில் உருவாக்கப்பட்ட அந்த சிலையானது புளோரன்ஸ் நகரில் இருந்து துபாய்க்கு வெற்றிகரமாக 6 ஆயிரம் கி.மீ தொலைவு கடந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வளாகத்தில் அந்த நாட்டின் அரங்கில் தற்போது அந்த சிற்பத்தின் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

இதன் அடிப்பகுதி மட்டும் 150 கிலோ எடையுள்ளதாக இருக்கும். மொத்தம் 14 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை மிகவும் பாதுகாப்பாக புளோரன்ஸ் பகுதியில் இருந்து அதனை உருவாக்கிய குழுவினர் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த சிற்பம் எக்ஸ்போ 2020 வளாகத்தில் இத்தாலி நாட்டு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பொருத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் பார்வையாளர்களுக்கு இந்த நகல் பளிங்கு சிற்பம் காட்சியளிக்க உள்ளது என அந்த இத்தாலி நாட்டு அரங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!