அமிர்தசரஸ்:
பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு துண்டு சீட்டுடன் பறந்து வந்த ஒரு புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சுதந்தரம் அடைந்ததில் இருந்தே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. இதனால் இந்திய எல்லைக்குள் மர்ம நபர்கள் யாரும் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக ராணுவத்தினர் இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் அனைத்து பகுதியிலும் தீவிர பாதுபாப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
துண்டு சீட்டுடன் வந்த புறா
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோரோவாலா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த புறா ஒன்று பாதுகாப்பு படை வீரரின் தோளில் வந்து அமர்ந்தது. அந்த புறாவின் காலில் கட்டப்பட்டு இருந்த ஒரு துண்டுச் சீட்டில் ஒரு செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது கண்டு பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வழக்குப்பதிவு செய்யுங்கள்
இதனை தொடந்து வீரர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெவித்தனர். உயர் அதிகாரிகள் அந்த புறாவை கங்கார்ஹ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். துண்டு சீட்டுடன் பறந்து வந்த புறா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் போலீசாரிடம் தெரிவித்தனர். ஒரு மனிதர் எல்லை பகுதியில் இருந்து இந்தியாவுக்கு அத்துமீறி வந்தால் சட்டத்த்தின்படிஅவரை கைது செய்து விசாரணை நடத்தலாம்.
விழிபிதுங்கி நிற்கும் போலீசார்
ஆனால் துண்டு சீட்டுடன் பறந்து வந்த புறாவை கைது செய்ய முடியுமா? இல்லை அதனிடம் விசாரணைதான் நடத்த முடியுமா? என்னய்யா இது? என்று விழிபிதுங்கி நிற்கின்றனர் பஞ்சாப் போலீசார். புறா மீது வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என்று மாநில சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனராம். இது தவிர புறா கொண்டு வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நம்பர் யாருடையது? புறாவை அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகினற்னர். பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா தற்போது ஒரு குற்றவாளியாய் காவல் நிலையத்தில் சோகத்துடன் அமர்ந்துள்ளது.
Comments
Post a Comment