தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
துபாயில் கொள்ளையனை சமார்த்தியமாக பிடித்த கேரள இளைஞர் - வைரல் வீடியோ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது நடந்த இநத சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் வசித்து வரும் கேரள மனிதர் ஒருவர், ரூ.80 லட்சம் ரொக்க பணத்துடன் ஓடிவந்த திருடனை தனது காலால் தட்டிவிட்டதால் ஒரு கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதில் ஒரு இளைஞர் கையில் கொஞ்சம் பணத்துடன் தப்பி ஓடி வருவதை ஜாஃபர் முன்னதாகவே கவனித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ஜாஃபர் தனது மாமா கடைக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது தூரத்தில் பணத்துடன் தப்பி ஓடி வரும் ஒரு திருடனை சில நபர்கள் துரத்தி வருவதை அவர் கவனித்தார். அப்போது அந்த திருடன் ஜாஃபரை கடந்து செல்ல முயன்றர். ஆனால் ஜாஃபர் சற்றும் யோசிக்காமல் தனது காலை நீட்டி திருடனின் கால்களை தட்டி விட்டுள்ளார். வேகமாக ஓடிவந்த திருடன் ஜாஃபர் கால் தடுப்பால் தனது கால் இடறி கீழே விழுந்துள்ளான்.
இதன் காரணமாக திருடனை துரத்தி வந்த நபர்கள் பணத்துடன் அவனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 14ம் தேதி பனியா ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரும் யோசிக்காத வகையில் வேகமாக ஓடி வரும் திருடனை தட்டி விட வேண்டும் என்ற ஜாஃபரின் யோசனையை நெட்டிசன்கள் பராட்டி வருகின்றனர். மேலும் அவர் ஒரு கால்பந்து வீரர் போல சாதுர்யமாக பந்தை தடுப்பது போல திருடனை தடுத்துள்ளதாக பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கலீஜ் டைம்ஸிடம் பேசியபோது ஜாஃபர் கூறியதாவது, “திருடன் சில நபர்களால் துரத்தப்பட்டான். அப்போது நான் அவனை பிடிக்க விரும்பினேன். ஆனால் அந்த திருடன் மிக வேகமாக ஓடுவதை உணர்ந்தேன். எனவே, நான் என் காலை நீட்டி அவன் வேகத்தை தடுத்தேன். எனது சகோதரர் நஜீப்பும் திருடன் ஓடி வந்த பாதையில் ஒரு நாற்காலியை வீசினார். இந்த இரண்டு காரணிகளின் கலவையால் திருடன் கீழே விழுந்தான், ”என்று தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து, திருடனை துரத்தி வந்த கும்பல் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருடப்பட்ட தொகையும், உரிமையாளரிடம் திருப்பித் தரப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக ஜாஃபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருவதாகவும், ஆனால் கொரோனா தொற்றுநோயால் வேலை இழந்ததாகவும் கூறியுள்ளார். இப்போது அவர் ஒரு டிரைவராக முயற்சிக்க மீண்டும் துபாய்க்கு வந்துள்ளதாக கூறினார்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...
Comments
Post a Comment