நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் நியமனம்: அமெரிக்காவில் சரித்திரம் படைத்தார், இந்திய பெண்

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் அமர்த்தப்பட்டு இந்திய வம்சாவளிப்பெண் வனிதா குப்தா சரித்திரம் படைத்தார்.
சரித்திரம் படைத்தார், இந்திய பெண்

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில், இணை அட்டார்னி ஜெனரல் பதவிக்கு இந்திய வம்சாவளிப்பெண்ணான வனிதா குப்தா (வயது 46) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நீதித்துறையில் இது மூன்றாவது பெரிய பதவி ஆகும்.இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளிப்பெண் இவர்தான். அந்த வகையில் அவர் புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார்.


செனட் சபை ஒப்புதல்

இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்கியது. இவருக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 49 ஓட்டுகளும் விழுந்தன.செனட் சபையில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தலா 50 இடங்களை கொண்டுள்ளன. ஓட்டெடுப்பில் தலா 50 ஓட்டு விழுந்து விட்டால், துணை ஜனாதிபதி தனது ஓட்டை பதிவு செய்து முடிவுக்கு உதவுவார். அந்த வகையில் வனிதா குப்தா நியமன ஒப்புதலுக்கு 50, எதிராக 50 ஓட்டுகள் விழுந்து விட்டால், முடிவு காண்பதற்காக தனது ஓட்டை போடுவதற்காக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சபையில் இருந்தார். ஆனால் குடியரசு கட்சி எம்.பி. லிசா முர்கோவ்ஸ்கி தனது ஓட்டை வனிதா குப்தாவுக்கு ஆதரவாக போட்டார். இதனால் அவர் 51 ஓட்டுகளை பெற்று விட்டதால், கமலா ஹாரிஸ் ஓட்டு போடும் அவசியம் எழவில்லை.

ஜோ பைடன் வாழ்த்து

வனிதா குப்தாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர் ராஜீவ் குப்தா, கமலா வர்ஷினி தம்பதியின் மகளாக பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியாவில் பிறந்து வளர்ந்து, யேல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டமும் பெற்றவர் இவர். அங்கு கொலம்பியா மாவட்டத்தின் சட்ட உதவி சங்கத்தின் சட்ட இயக்குனரான சின் கே. லேயை மணந்துள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மனித உரிமைகளுக்காக போராடி பிரபலமான வக்கீல் வனிதா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்