நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இஸ்ரேலில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை கண்டுடெடுப்பு

இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெருசலேம்

இஸ்ரேலில் யவ்னே நகரில் நடந்த அகழாய்வின்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோழி முட்டையை கண்டெடுத்துள்ளனர்.

இந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டு போகாமலும், சேதம் அடையாமலும் இருப்பது ஆய்வாளர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.


கழிவுநீர் தொட்டியிலிருந்து முட்டையுடன், பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் முட்டை துண்டுகள் ஜெருசலேமில் உள்ள டேவிட் நகரத்திலும், சிசேரியா மற்றும் அப்பல்லோனியாவிலும் காணப்பட்டன.

இதுகுறித்து ஆய்வாளர் டாக்டர் லீ பெர்ரி கால் கூறும் போது 

இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பாகும். தென்கிழக்கு ஆசியாவில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கோழிகள் வளர்க்கப்பட்டன, ஆனால் அவை மனித உணவில் காலம் கடந்த பிறகே சேர்க்கப்பட்டது. அவை சேவல் சண்டை போன்ற பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன.அவை அழகான விலங்குகளாகக் கருதப்பட்டன, பண்டைய உயிரியல் பூங்காக்களில் காட்சிக்கு வைக்கப்பட்டன, அவை மன்னர்களுக்கு பரிசுகளாக வழங்கப்பட்டன என கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்