150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சுறா மீன் இனம் கண்டுபிடிப்பு!
- Get link
- X
- Other Apps
வாழ்நாள் முழுவதும் சுறாவின் பற்கள் அடிக்கடி மாற்றப்படுவது தான் இதற்கு காரணம். சுறா மீனின் பற்களானது குருத்தெலும்புகளால் ஆனவையாம்.
அரிய வகை சுறா மீன் இனமான இது முற்றிலும் அழிந்துபோய் விட்டன. இந்த சுறா மீனின் பற்களைக் கொண்டு இந்த சுறா மீன் இந்த வகை குடும்பத்தை சார்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான புதைப்படிவ கண்டுபிடிப்புகளில் சுறாவின் பற்கள் கண்டறியப்பட்டுள்ளன. வாழ்நாள் முழுவதும் சுறாவின் பற்கள் அடிக்கடி மாற்றப்படுவது தான் இதற்கு காரணம். சுறா மீனின் பற்களானது குருத்தெலும்புகளால் ஆனவையாம்.
இங்கிலாந்தின் வடக்கு கடலின் ஆழமற்ற அடுக்குகளில் காணப்பட்ட 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஜூராஸிக் காலத்தை சேர்ந்த பாறைப் படிவங்களில் இந்த அரிய வகை சுறா மீன் படிவத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த புதைபடிவமானது 361 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு கோள் பூமியைத் தாக்கிய போது அழிந்து போனதாம். இதன் காரணமாக டைனோசர்கள் உட்பட அனைத்து தாவர மற்றும் விலங்குகளில் மூன்றில் ஒரு பகுதி உயிரினங்கள் அழிந்து போனதாம். சமீபத்தில் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 19 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகின் 70 சதவிகித சுறா மீன் இனங்கள் அழிந்து போனதை கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும் சுறா மீன் இனங்கள் அழிந்து போவதற்கான முழுமையான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை. எட்சஸ் கலெக்சன் மியூசியம் அருங்காட்சியகத்தில் பெயர் குறிப்பிடப்படாத சுறாவின் எலும்புக்கூடுகள் உள்ளன. அவை இன்னும் சில வருடங்களில் ஆய்வு செய்யப்பட்டு அடையாளம் காணப்படும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த சுறா மீன்களின் வகைகள் கண்டறியப்பட்டால் அவை எந்த சுறா மீன் இனம், அதன் தன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அழிந்து போன உயிரினம் குறித்து நாம் ஆய்வு செய்யும் போது அது வாழ்ந்த காலத்தில் பூமி எத்தகைய சுற்றுச் சூழலைக் கொண்டிருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு இயற்கை பேரழிவுகள் நேரும் போதும் பூமி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே உள்ளது. மேலும் பூமியில் உள்ள உயிரினங்களும், சூழலுக்கு ஏற்ப தங்களது வடிவம் மற்றும் தன்மைகளையும் மாற்றிக்கொண்டே வந்துள்ளது. அதனை இந்த அழிந்து போன சுறா மீன் இனம் நமக்கு இன்னும் அழுத்தமாக தெரிவிக்கிறது.
ALSO READ : ‘வைரத்தை தேடி’ வறியவர்களின் பயணம் - தென் ஆப்பிரிக்காவில் ஒரு புதையல் கிராமம்?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment