நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த தைரியம் இருக்கே! நாய்களை காக்க கரடியுடன் போராடிய 17 வயது இளம் பெண் – வைரல் வீடியோ

தன்னுடைய குட்டிகளை காக்க கரடியும், தன்னுடைய நாய்களை காக்க அந்த பெண்ணும் கிட்டத்தட்ட பாசப் போராட்டம் தான் நடத்தி இருக்கிறார்கள் என்கின்றனர் நெட்டிசன்கள்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பார்ட்பரி பகுதியில் 17 வயது இளம்பெண் ஒருவர் கரடி ஒன்றுடன் சண்டை போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோ ஒன்றில் கரடி ஒன்று தன்னுடைய இரண்டு குட்டிகளை பாதுகாப்பாக அழைத்து அந்த இளம் பெண் வீட்டின் சுற்றுச்சுவற்றில் ஏறுகிறது.



இதனைப் பார்த்த அந்த பெண் வீட்டின் வளர்ப்பு நாய்கள் குரைக்க ஆரம்பிக்கவும், குட்டிக்கரடிகள் பாதுகாப்பாக நகர்ந்து செல்கிறது. குட்டிகளை காப்பாற்றும் பொருட்டு நாய்களுடன் கரடி சண்டையிட, நாய்களை காப்பாற்ற நாய்களின் உரிமையாளர் கரடியை காம்பௌண்ட் சுவருக்கு வெளியே தள்ளும் நிலைமை உருவாகிவிட்டது.

இந்த வீடியோவை பார்த்த எல்லாருக்கும் ஒரு வகையில் திகைப்பும் மற்றொரு வகையில் அச்சமும் ஏற்பட்டிருப்பது உண்மை தான். இந்த நிலைமை எப்படி வேண்டுமானாலும் சில நொடிகளில் தடம் மாறியிருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக கரடிக்கோ, கரடியின் குட்டிகளுக்கோ, நாய்களுக்கோ, குறிப்பாக அந்த பெண்ணுக்கோ எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. 





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்