நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு குர்தாவின் விலை ரூ.2.5 லட்சமா? கொதிக்கும் நெட்டிசன்கள்!

குர்தாவை மொத்த விலையைக் கொடுத்தும் வாங்கலாம், முழு தொகையை செலுத்தி வாங்க முடியவில்லை என்றால் தவணை முறையிலும் செலுத்தலாம்.
இந்தியன் குர்தா வகையைச் சேர்ந்த உடைக்கு Gucci என்ற இத்தாலி நிறுவனம் இந்திய ரூபாயில் 2.5 லட்சம் என விலை நிர்ணயித்துள்ளது நெட்டிசன்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் பேஷன் ஹவுஸ்ஸான Gucci, ப்ளோரன்ஸ் நகரில் அமைந்துள்ளது. ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் Gucci-ல் காலணிகள், ஹேண்ட் பேக்குகள், அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் உடைகள் எல்லாம் சற்று அதிக விலையில் காணப்படும். நகைகள், வாட்ச் என பட்டியலிப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே பல ஆயிரங்களில் இருந்து லட்சங்களில் மட்டுமே விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

முதல்முறை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தலை சுற்றிவிடும். அப்படியான ஒரு அனுபவத்தை நெட்டிசன்கள் சிலர் பெற்றிருக்கின்றனர். அதாவது, இந்தியன் குர்தா ஸ்டைலில் இருக்கும் உடைக்கு Gucci இணையதளத்தில் 3,500 டாலர் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாலரில் கேட்கும்போது உங்களுக்கு 3, 500 ரூபாய் போன்று தோன்றலாம். இந்திய ரூபாயில் அந்த குர்தாவின் விலை 2,50,000 லட்சம் ரூபாய் ஆகும். ஒரு உடைக்கு மட்டும் இந்த விலை. ’ஆர்கானிக் லைனியென் கப்டான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குர்தா, இத்தாலியின் ஃப்ளோரல் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளதாக, உடைக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள டெஸ்கிரிப்சனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்து பகுதி ஓபன் டைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. self-tie tassels வசதி உள்ளது. மொத்த விலையைக் கொடுத்தும் வாங்கலாம். விருப்பம் உடையவர்கள் முழு தொகையையும் செலுத்தி வாங்க முடியவில்லை என்றால், தவணை முறையில் செலுத்தலாம்.

இந்த வசதியை Gucci நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது. ஆசிய நாடுகளில் வாழும் மக்கள் இதுபோன்ற குர்தியை அன்றாடம் அணிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்தியன் குர்தி ஸ்டைலில் இருப்பதால், அவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை என நெட்டிசன்கள் பலர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கக்கூடிய குர்தா, இத்தாலியில் இரண்டரை லட்சத்துக்கு Gucci விற்பனை செய்வது அநியாயம் என்றும், 500 ரூபாய்க்கு இங்கு குர்தா கிடைக்கிறது, அப்படி அந்த குர்தாவில் என்ன ஸ்பெஷல்? என சில நெட்டிசன்களும் வினவியுள்ளனர்.

என்ன கலை வடிவமைப்பு ஸ்பெஷல் இருந்தாலும், அவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா? என்றும், தலையே சுற்றுகிறது எனவும் நெட்டிசன்கள் புலம்புகின்றனர். ஒரு உடைக்கு மட்டும் இவ்வளவு விலை என்று பார்த்தால், இதேபோன்ற மற்ற பொருட்கள், ஆபரணங்களின் விலையும் பல ஆயிரம் மற்றும் லட்சங்களிலேயே அந்த வெப்சைட்டில் இருக்கிறது, நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே எனவும் சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர். 2018ஆம் ஆண்டு விதவிதமான தலைப் பாகைகளை அறிமுகப்படுத்திய Gucci, டர்பன்களை பேஷன் ஷோக்கு பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இது சீக்கியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருக்கும் சீக்கியர்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!