நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு வாய் “கறிக்கு” ஆசப்பட்டு, 5 கோடி ரூபாய் காருக்கு மங்களம் பாடிய இளைஞர் – வைரல் வீடியோ

இந்த அரிதான ஐடியா அவருக்கு மட்டுமே தோன்றியிருப்பதாக நினைத்து சிரித்தபடியே மேலும் மேலும் அந்த இறைச்சியை சூடாக்க, சூடான லாம்போகினி எஞ்சின் தன்னுடைய வேலையை காட்டிவிட்டது.
எத்தனையோ சாதனைகள் புரிஞ்சு செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் இளைஞர்களுக்கு மத்தியில் இந்த சீன இளைஞர் வேற ரகம். ஹூனான் மாகாணத்தில் உள்ள சங்ஷா பகுதியில் தன்னுடைய நண்பர்களுடன் கார் பார்க்கிங்கில் அமர்ந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென ஒரு ஆசை வரவும் பார்பிக்யூ கறி உண்ண விரும்பியிருக்கிறார். கிரில்லும் ஸ்ட்வ்வும் இல்லாத காரணத்தால் தன்னுடைய லாம்போகினி காரை பயன்படுத்தி உணவு சமைக்கும் வித்தியாசமான முயற்சியில் ஒரு வேளை பார்த்திருக்கிறார்.

அவருக்கு மட்டும் தான் சமையல் என்பது சித்து வேலை என்று தெரிந்திருக்கிறது. வாகனத்தின் எஸ்ஹாஸ்டரில் இருந்து வரும் நெருப்பை பயன்படுத்தி இறைச்சியை சூடுபடுத்த துவங்கியிருக்கிறார் அவர். இந்த அரிதான ஐடியா அவருக்கு மட்டுமே தோன்றியிருப்பதாக நினைத்து சிரித்தபடியே மேலும் மேலும் அந்த இறைச்சியை சூடாக்க, சூடான லாம்போகினி எஞ்சின் தன்னுடைய வேலையை காட்டிவிட்டது. மேலும் கம்பார்ட்மெண்ட்டில் இருந்து புகையை கக்க, கூலண்ட் ஆய்ல் கசிந்து அந்த பகுதி முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது.

பயங்கரமான புகை எழும்பவும் தான் தன்னுடைய காருக்கு அவர் மங்களம் பாடியிருப்பது நினைவிற்கே வந்தது. லாம்போகினி அவென்டேட்டர் விலை இந்திய ரூபாயில் ரூ. 5 கோடிக்கும் மேலே. இவர் பார்த்து வைத்த காரியத்திற்கு ரீப்பேர் பார்த்த பணம் மட்டும் 57 லட்சமாம். 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்