நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொடூரமாக 80 பேரை வேட்டையாடிய 'ஒசாமா பின்லேடன்' முதலை..!

கிட்டத்தட்ட 16 அடி நீளமுள்ள இந்த முதலைக்கு ஒசாமா பின்லேடன் என்று பெயரிடப்பட்டது.
மிகவும் பிரபலமான விக்டோரியா ஏரி, ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரியது மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய எரியும் இதுதான். இங்கு ஒசாமா பின்லேடன் என்ற 75 வயதான நைல் முதலை ஒன்று உள்ளது. சமீப காலமாக இந்த முதலை ஏரியின் அருகிலுள்ள கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்டவர்களை கொன்று சாப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட 16 அடி நீளமுள்ள இந்த முதலைக்கு ஒசாமா பின்லேடன் என்று பெயரிடப்பட்டது.

மேலும் 1991 மற்றும் 2005க்கு இடையில் லுகங்கா எனும் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குழந்தைகள் உட்பட அதன் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியைக் கொன்றதற்கு இந்த முதலையே காரணம் என டெய்லி ஸ்டார் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அந்த பத்திரிகை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த கொடிய முதலை தனது வாழ்நாளின் பெரும்பகுதியை விக்டோரியா ஏரியில் தான் கழித்து வருகிறது. மேலும் ஏரிக்கு தண்ணீர் எடுக்க வரும் சிறுமிகள் மற்றும் சிறுவர்களை பலமுறை தாக்கியுள்ளது. இந்த முதலை நீரிலிருந்து வெளியேறி மீனவர்களின் படகுகளில் குதித்து மக்களைப் பயமுறுத்தியும் உள்ளது.

மேலும், தனது பசிக்காக சிலரை கொன்று தண்ணீருக்கடியில் இழுத்து செல்வதும் உண்டு. இதுபோன்ற ஒரு பயங்கரமான சம்பவத்தில், மீனவர் ஒருவர் ஒசாமா முதலையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த மீனவரின் கிழிந்த உடைகள் தண்ணீரில் மிதப்பதைக் கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்ற மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் உயிர்பிழைத்த பவுல் என்பவர், தனது சகோதரருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி விளக்கினார். இதுகுறித்து சிட்னி மார்னிங் ஹெரால்டுடன் பேசும்போது, ​​"நானும் எனது சகோதரரும் மீன்பிடிக்க படகில் சென்ற போது, எனது சகோதரர் படகின் பின்புறத்தில் அமர்ந்தபடி படகை செலுத்தி வந்தார்.

நாம் படகின் முன்பகுதியில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒசாமா படகின் அருகில் வந்து எனது சகோதரனை இழுத்துச் சென்றது. அது எனக்கு மிகவும் பயங்கரமான நாள். அப்போது ஒசாமா தண்ணீரில் செங்குத்தாக குதித்து, படகின் பின்புறத்தை மூழ்கடித்தது. பின்னர் தண்ணீரில் விழுந்த எனது சகோதரர் பீட்டரின் காலை கவ்வி, அவரை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. ஆனால், பீட்டர் மீண்டும் படகில் ஏற முயற்சி செய்தார். சுமார் ஐந்து நிமிட போராட்டத்திற்குப் பிறகு, எனது சகோதரரின் கண்ணீர் சத்தம் மட்டும் எனக்கு கேட்டது.

முதலை தனது காலை உடைத்துவிட்டது என்று எனது சகோதரர் கூச்சலிட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு முதலை பீட்டரை கவ்விக்கொண்டு தண்ணீருக்கடியில் இழுத்து சென்றது. சில நாட்களுக்குப் பிறகு பீட்டரின் தலை மற்றும் கை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது" என வேதனையுடன் தெரிவித்தார். இந்த நிலையில், 2005 ஆம் ஆண்டில் இந்த மிருகத்தனமான முதலையிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி கிராமவாசிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சுமார் 50 உள்ளூர் வாசிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து 7 இரவு மற்றும் 7 பகல் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முதலை ஒசாமா கைப்பற்றப்பட்டது.

இப்போது, ​​இந்த முதலை உகாண்டா க்ரோக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சொத்து ஆகும். இந்த நிறுவனம் முதலை தோல் கொண்டு கைப்பைகளை உருவாக்கி இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. வனவிலங்கு ஆர்வலர்கள் ஒசாமாவின் தலைவிதியை விமர்சித்துள்ள நிலையில், லுகங்கா கிராமவாசிகள் அதிகாரிகள் அதை இலகுவாக விட்டுவிட்டதாக நம்புகிறார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!