நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மிதக்கும் சந்தைகள்!

பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைகளைத் தேடி நாம்தான் செல்ல வேண்டும் இல்லையா? ஆனால், உலகின் சில இடங்களில் கடைகள் நம்மைத் தேடி வருகின்றன! இவை தண்ணீரில் மிதக்கக்கூடிய படகுக் கடைகள். தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளில் மிதக்கும் சந்தைகள் அதிக அளவில் உள்ளன.
இதில் அதிக அளவில் மிதக்கும் சந்தைகளைக் கொண்ட நாடு தாய்லாந்து. புகழ்பெற்ற மிதக்கும் சந்தைகளில் ஒன்று பாங்காக்கில் இருக்கும் டாம்னோயன் சடுவாக். இங்கே படகுகளின் எண்ணிக்கையும் அதிகம். மக்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தச் சந்தை அதிகாலையிலேயே ஆரம்பித்துவிடும். மதியத்துடன் முடிந்துவிடும். பாங்காக்கில் உள்ள அம்பவா மிதக்கும் சந்தை மாலையில் மட்டுமே இயங்கும். இப்படி இன்னும் சில சந்தைகள் தாய்லாந்தில் உள்ளன.

வியட்நாமின் மிகப் பெரிய மிதக்கும் சந்தை மெகோங் டெல்டா. தினமும் நூற்றுக்கணக்கான படகுகள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இதே போல காய் பி மிதக்கும் சந்தையும் புகழ்பெற்றது. இந்தியாவிலும் மிதக்கும் சந்தை எழில் கொஞ்சும் காஷ்மீர் நகரின் தால் ஏரியில் இயங்கி வருகிறது. ஏரியில் மிதக்கும் படகு வீடுகளை நோக்கி, படகுகளில் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள். ஏராளமான பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஜில்லென்ற குளிரையும் தூரத்தில் பனி போர்த்திய மலைகளையும் ரசித்தபடியே பொருட்களை வாங்கலாம்.

எதற்காக மிதக்கின்றன?

நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் விவசாயிகள் இன்றும் தங்களின் காய்கறி, பழங்கள், வேறு சில பொருட்களைப் படகுகளில் எடுத்துச் சென்றுதான் விற்கிறார்கள். சிறிய படகுகளில் அடுப்பை வைத்து சுடச்சுட உணவுகள், சூப், தேநீர்கூட விற்கிறார்கள். நூற்றுக்கணக்கான படகுகளில் பல வண்ணப் பொருட்களை, கரையில் நின்று பார்த்தால் பிரமாதமாக இருக்கும். இதற்காகவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்