நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடம்புல_யூரிக்_அமிலம்_அதிகமா இருந்தா_கிட்னிக்கு_ஆபத்து……ஏன்னு_தெரிஞ்சுக்கங்க......

உடம்புல_யூரிக்_அமிலம்_அதிகமா #இருந்தா_கிட்னிக்கு_ஆபத்து……

ஏன்னு_தெரிஞ்சுக்கங்க......

      👉கவுட் என்ற கீல்வாதம்
பிரச்னையைக்கண்டு……………

        👉கொள்ளாமல் விட்டால் 
அது சிறுநீரகத்தையும்…………
பாதிக்கலாம்❓❗

🔯 கவுட் என்ற யூரிக் அமிலம்
பாதிப்பு…………

உடலுக்கு தேவையற்ற பொருள்கள் உடலில் தங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். இல்லையெனில் அவை தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும்.

யூரிக் அமிலம் அதிகரிப்பதால் முதலில் பாதிப்பை சந்திப்பது சிறுநீரகம் தான். 

இதனால் சிறுநீரக கல், அதை தொடர்ந்து முடக்குவாதம்,சிறுநீரக பற்றாக்குறை போன்றவை ஏற்படும்.

⭕ #ஏன்_சிறுநீரகம்_பாதிக்கிறது………

ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் நெஃப்ரான்கள் செல்களால் ஆனவை. உடலில் ரத்தத்தில் அதிகரித்துவிட்ட யூரிக் அமிலம் சிறுநீரகத்துக்கு அதிகப்படியாக வரும் போது இவை நெஃப்ரான்
செல்களை அழிப்பதால் இவை அளவில் சுருக்கமடைகின்றன.

இதனால் சிறுநீர் வடிகட்டுதல் சுருங்குகிறது. சிறுநீர் வெளியேற்றும் நச்சுகளும் , கழிவுகளும் ரத்தத்திலேயே இருக்கின்றன.

ரத்தத்தில் கழிவுகள் இருக்கும் பொது தான் உடலில் முகம், கை, கால் , வயிறு பகுதிகள் வீங்க தொடங்கியுள்ளன. இதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் போது மூச்சுத்திணறலை உண்டாக்கி சிறுநீரகத்தை மேலும் மேலும் பாதிக்க செய்கிறது. சிலர் மோசமான பாதிப்பில் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து மாற்று சிறுநீரகம் பொருத்தும் அளவுக்கு விபரீதத்தை உண்டாக்கிவிடும்.

சிறுநீரகங்களோடு எலும்புகளை இணைக்கும் மூட்டுகளிலும் பாதிப்பை உண்டாக்குகின்றன. உடலில் ஒரு டெசி என்னும் அளவு ரத்தத்தில் ஆண்களுக்கு 7 மி.கி வரையிலும் பெண்களுக்கு 6 மிகி. வரையிலும் யூரிக் அமிலம் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும் போதே கவனத்தோடு இருக்க வேண்டும்.

ரத்தத்தில் அதிகப்படியாக மிதக்கும் யூரிக் அமிலமானது எலும்புகளில் குறிப்பாக இரண்டு எலும்புகள் இணையும் மூட்டுகளில் படிமங்களாக படிய தொடங்குகிறது. இவை மூட்டில் தேங்க தேங்க மூட்டுவலி ஆரம்பிக்கிறது. இந்த யூரிக் அமிலம் சிறுநீரகத்தில் சென்று தேங்கும் பொது தான் சிறுநீரக கற்கள் உருவாகிறது.

ஆரம்ப கட்டத்தில் யூரிக் அமிலமானது சிறுநீரக கற்களை மட்டுமே உண்டாக்கும் என்று கூறிவந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு அடைந்தவர்களை பரிசோதனை செய்த போது அதிகம் பேர் யூரிக் அமிலத்தால் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டது. தற்போது சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்கவே அதிகரித்து வருகிறது.
குறிப்பிடத்தக்கது.

🔴 #கவுட்_என்ற_கீல்வாதம்_என்றால் #என்ன❓

🔯 ஆயுர்வேததில் இதை……

வாத ரக்தம், ஆத்ய வாதம் என்பது தான் ஆயுர்வேதத்தில் கவுட் நோய்க்கான பெயர். 

வாததோஷம், பித்த தோஷம் ரக்ததாது ஆகியவை நிலைப்பாடு மாறுவதே இந்நோய்க்கான காரணம். ஆயுர்வேத கூற்றுப்படி………

அதிக உப்பு, புளிப்பு, கசப்பு கார சுவையுள்ள உணவுகள், அதிக எண்ணெய் உணவுகள், அதிக சூடான உணவுகள், உலர்ந்த, பாதுகாக்கப்பட்ட, கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள், கொள்ளு, உளுந்து, புளித்த மோர், தயிர், மது, பகல் தூக்கம், இரவில் தூங்காமை, கோபம் சேர்க்கக்கூடாத முறைகளில் சேர்த்த உணவுகள் 

(எ.காட்டு -- பாலுடன் அல்லது பால் பொருட்களுடன் மீன் சேர்க்கக்கூடாது) ஆகியன கவுட் நோயை அதிகமாக்கும்.

👉 கவுட்(Gout) என்ற கீல்வாதம்
என்பது ஒரு வகை மூட்டுவாதம்.
இது மூட்டுக்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும். 

கவுட் தீவிரமாகும்போது, யூரிக் அமில படிகங்கள் (டோபி) உடலின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் மென்மையான திசுக்களை பாதிக்கும். பெரும்பாலும் விரல்களில் முடிச்சு முடிச்சாக காணப்பட்டாலும், நோய் தீவிரமாகும்போது, தோள் பட்டை துனி, காது ஆகிய இடங்களிலும் வரலாம். சில சமயம் குரல்வளை, முதுகுத்தண்டு ஆகிய இடங்களில் வரவாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகம், இதயம் ஆகியவற்றில் கூட யூரிக் அமிலப்படிகங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

இரத்த ஓட்டத்தில் உள்ள அதிக யூரிக் அமிலம் காரணமாக இது ஏற்படுகிறது. மூட்டுகளில் யூரேட் என்னும் படிகங்களை உருவாக்குகிறது. இதனால் மூட்டுகளில் வீக்கம் மற்றும் கடுமையான வலி ஏற்படுகிறது.

சிறுநீர் கழிக்கும் போது உடலில் இருந்து இந்த அமிலம் வெளியேறுகிறது. 

சில சமயங்களில் யூரிக் அமிலம் சிறுநீரகத்தின் வழியாக வெளியேறாமல் இரத்தத்தில் தங்கிவிடுகிறது.

கிட்னியால் யூரிக் அமிலம் ஜீரணம் செய்ய இயலாமல் போகையில் புரதத்தின் மீதங்கள் யூரிக் அமிலமாக மாறுகிறது.

👉இதன் அளவுகள் அதிகமானால்……… 

▶ ரத்தத்தில் யூரிக் அமிலம் (Uric acid) அளவு அதிகரிக்கும்போது கவுட் ஏற்படும். 

சராசரியாக ஒரு மனிதனுக்கு…… 
6 -- 7 மி லி கிராம் அளவுக்கு யூரிக் அமிலம் உடலில் இருப்பது இயல்புநிலை. இதற்கு மேல் சென்றால் கவுட் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கவுட் வந்தால் அடிக்கடி குதிகாலில் கடும் வலி ஏற்படும். இத்தகைய நேரஙக்ளில் உடல் அதிக அளவில் இருக்கும் யூரிக் அமிலத்தை வெளியேர்றிவிடும். அப்படி வெளியேற்ற செய்யும் வகையிலான வலியே இது.

⭕ #பொதுவன_அறிகுறிகள்❓

▶ இரவில் திடீரென வரும்.

▶ வந்து 24 மணிநேரம் வரை வலி மிகக்கடுமையாக இருக்கும்.

▶ பெரும்பாலும் பாதத்தில் பெருவிரல் அடியில் வந்தாலும், பாதம், கணுக்கால், முழங்கால், கை, மணிக்கட்டு ஆகிய இடங்களிலும் வரலாம்.

▶சிலருக்கு கைவிரல், முழங்கால் முட்டி, முழுங்கை முட்டி போன்ற எந்த மூட்டுகளில் வேண்டுமானாலும் வலியும், வீக்கமும் வரலாம். 

▶கடுமையான வலி குறைந்த பின்னும், ஒருவித சவுகரியம் இருந்து கொண்டே இருக்கும். அவை நீண்ட நாட்கள் இருப்பதோடு, பிற மூட்டுக்களையும் பாதிக்கும்.

▶ பாதித்த இடம் சிவந்து உப்பி விடும்.

▶பெருவிரலில் வீக்கம், 

▶பெரும்பாலும் கால் பெருவிரலில் கவுட் வரும். 

▶நீர் கோத்து வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். 

▶இந்த வீக்கத்தில் நீர் கோத்துக் கொண்டு தாளாத வலி ஏற்படும். 

▶முள் குத்துவது போன்ற எரிச்சலையும், நெருப்பின் மேல் நடப்பது போன்ற எரிச்சலையும் சிலர் உணர்வதாகச் சொல்கின்றனர்.

யாருக்கு கவுட்வரலாம்❓
யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான சில காரணங்கள்.❓

▶பெரும்பாலும் ஆண்களுக்கு கவுட் அதிகமாக வரும். ஆனால், இப்போது பெண்களுக்கும் கூட வருகிறது. 

▶பொதுவாக ஆண்கள் 30 முதல் 50 வயதிற்குள் கீல்வாதத்திற்கு உள்ளாகின்றனர். 

▶பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பின் இந்நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

▶சிறுநீரக நோய், நீரிழிவு நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை உடலில் கீல்வாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.

👉அதிக அளவு குடிப்பழக்கம்.குறிப்பாக ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். 

👉சில நேரங்களில் மரபு ரீதியாக யூரிக் அமிலம் அதிகரிக்கக் கூடும்.

👉உடல் பருமன்.

👉கழிவுகளை நீக்கும் திறனை கிட்னி இழத்தல் போன்ற காரணங்களாலும் கூட உடலில் உள்ள யூரிக் அமிலம் அதிகரிக்கக் கூடும்.

👉சிறுநீரக பெருக்குக்கு கொடுக்கப்படும் மருந்துகள் கூட இதை அதிகரிக்கும்.

👉தவறான உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங்களால் கவுட் வரும். 

👉யூரிக் அமில பிரச்சனை வந்தால் மாமிசம் சாப்பிடவேண்டாம் என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் சைவ உணவு உண்ணும் பலருக்கும் அதிக அளவில் கவுட் வரும். அவர்கள் எதை நிறுத்துவது❓

மேலும் மாமிசத்தை உண்ணாமல் விடுவதால் யூரிக் அமிலத்தின் அளவில் 10% மட்டுமே குறையும். இது பெரிய அளவிலான மாற்றம் அல்ல.

💊 கவுட் தவிர்க்க………

கிட்னிகளின் சுமையை குறைக்கும் 
வேண்டும்.❗❗

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அடங்கியுள்ள ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நார்ச்சத்துக்கள் யூரிக் அமிலத்தை கட்டுபடுத்துவதாக கூறுகின்றனர். எனவே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள், கேரட், குடைமிளகாய், காலிஃப்ளவர், இஞ்சி, பூண்டு, தேங்காய்,துளசி சிறுதானியங்கள்,ஓட்ஸ், ப்ராக்கோலி 
எலுமிச்சை, பன்னீர் திராட்சை,
பெங்களூர் தக்காளி,பாதாம்
முட்டைக்கோஸ்,வெள்ளரிக்காய்,
போன்றவைகளை உண்ணுவது நல்லது.

ஆலிவ் எண்ணெய் பயன் படுத்தலாம். சாதாரண எண்ணெய் நமது உடலில் புளித்த அமிலத்தை சுரக்க வைக்கிறது. இதனால் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள வைட்டமின் ஈ கொல்லப்படுகிறது. இது ஆலிவ் எண்ணெயால் தடுக்கப்படுகிறது.

❌இனிப்பு கலந்த பேக்கரி உணவுப் பொருட்களில் யூரிக் அமிலம் அதிகமாக சுரக்கிறது. எனவே கேக் போன்ற பேக்கரி பொருட்களை தவிர்ப்பது நல்லது.

தண்ணீர் என்பது உடலில் பல செயல்பாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கும். சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துவது என்பது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவதால் யூரிக் அமிலம் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. அதிகமாக தண்ணீரை குடிக்கும் போது அது உங்கள் கிட்னியில் தேங்கிருக்கும் யூரிக் அமிலத்தை சிறுநீரகம் வழியாக வெளியேற்றிவிடும். ஆனால் குறைந்த அளவு தண்ணீரை சீரான இடைவேளையில் குடிக்க வேண்டும்.

செர்ரி பழங்களை அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் என கூறுகின்றனர்.

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சேர்க்கப்பட்டால் அது அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும்.

திரவ உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

❌குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட திரவ உணவுகளைத் தவிர்க்கவும்.

இயற்கையாகக் கிடைக்கக் கூடிய திரவ உணவுகளை உண்பதால் கவுட் பிரச்னையின் தாக்கம் குறையும்.

❌ பீர், ஒயின் மட்டுமல்ல, மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

கொழுப்பு குறைந்த பால் பொருட்களைச் சாப்பிடலாம். 

காலை உணவில் அவசியம் 
புரதச் சத்துக்கள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும்.

❌மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்ற விலங்குகளின் இறைச்சி ,இறால், நண்டு, மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்கள்,

👉குறிப்பாக……

ஈரல், மண்ணீரல், குடல்,கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற
உறுப்புகள் சார்ந்த அசைவ உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

[ அசைவ உணவுகளால் கவுட் பிரச்னை வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. எனினும் அசைவ உணவுகளை அளவாக உண்ணலாம். ]

உடல் எடையை சீராகப் பராமரிப்பது அவசியம். 

உடல் எடை கூடாமல் பார்த்துக் கொண்டால் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் இருக்கும். 

உடல் எடையைக் குறைக்கிறேன் என்று எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. அதாவது விரதம் இருக்கத் தேவையில்லை. 

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இயற்கை முறையில் விளையும் ஆர்கானிக் உணவுகளையே பிரதான உணவாக மாற்றிக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்