சிலிண்டரை தம்புல்ஸ் மாதிரி தூக்கி அசால்டாக உடற்பயிற்சி செய்யும் பெண்ணின் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.
ஸ்டீரியோடைப் மைண்ட் செட் சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் பரவியுள்ளது. ஒரு விஷயத்தை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம். ஏன் அப்படி செய்ய வேண்டும் என்றால்? சொல்பவரிடம் பதில் இருக்காது. அதைபோலவே பெண்கள் சேலைக் கட்டியிருந்தால் ஒரு சிலவற்றை செய்ய முடியாது அல்லது செய்யக்கூடாது என்ற பார்வையும் இருக்கிறது. அந்த ஸ்டீரியோடைப் மைண் செட்டை உடைப்பதுவே சாதனையாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பெண் ஒருவர் சேலையில் உடற்பயிற்சிகள் செய்து அசத்துகிறார்.
உடற்பயிற்சி தானே, அதில் என்ன இருக்கிறப்போகிறது என்ன நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த வீடியோவை பார்த்தால் என்னம்மா? இப்படி பிண்றியேமா? என கேட்பீர்கள். ஏனென்றால், அந்தப் பெண் தம்புல்ஸ் (Thumbles) க்குப் பதிலாக சிலிண்டரைத் தூக்கி உடற்பயிற்சி செய்கிறார். இன்ஸ்டாகிராமில் வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், ஷைலி சிக்கரா என்ற அந்தப் பெண் சிவப்பு நிற சேலையில் சிலிண்டரை தலைக்கு மேல் தூக்கி உடற்பயிற்சி செய்கிறார். மற்றொரு வீடியோவில் துணி ஒன்றால் சிலிண்டரைக் கட்டி தலைக்கு மேல் தூக்கி பயிற்சி எடுக்கிறார்.
அசால்டாக சிலிண்டரைத் தூக்கி அவர் செய்யும் பயிற்சிகள் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. ஆண்கள் மட்டுமே சிலிண்டர் மற்றும் கற்களை தூக்குவது, அதிக எடையுள்ள பொருட்களை அவர்களால் மட்டுமே தூக்க முடியும் என்ற பொதுப்புத்தியை உடைக்கும் விதமாக ஷைலி சிக்கராவின் வீடியோக்கள் இருப்பதால் நெட்டிசன்கள் பாராட்டவும் தவறவில்லை.
உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் அவசியம் என்பதையும், செய்ய முடியாது என சமூகம் நினைக்கும் அல்லது திணிக்கும் விஷயங்களை பெண்களாலும் முடியும் என்பதை உணர்த்தும் வகையில் அவரது வீடியோ இருப்பதாக கமெண்ட் அடித்துள்ளனர். தொடர்ந்து தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
மற்றொரு வீடியோவில், சிறுவர்களுடன் இணைந்து பாட்டி ஒருவர் உடற்பயிற்சி செய்கிறார். சக்கர வடிவில் இருக்கும் இரும்பை கைகளில் தூக்கி பயிற்சி எடுக்கும் அவரை வாழ்த்தியுள்ள இணையவாசிகள் பலருக்கும் முன்னுதாரணமாக அவர் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் தற்போது உடற்பயிற்சி மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக இருக்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், உணவு மற்றும் உடற்பயிற்சியில் பலரும் கவனம் செலுத்துகின்றனர். அதன்தொடர்ச்சியாகவே, உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Comments
Post a Comment