நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடற்பயிற்சியின் தீவிரத்தை எப்படி கண்காணிப்பது?

உங்கள் இதயத் துடிப்புக்கும் உடற்பயிற்சியின் தீவிர செயல்பாட்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. நீங்கள் வேகமாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் சரியான முறையில் தான் உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள் என்பதை எப்படி கண்காணிப்பது? இதற்கு உங்கள் உடற்பயிற்சியின் தீவிர அளவீட்டை அறிய வேண்டும். இதை 1 முதல் 10 கணக்கில் அளவீடு செய்கின்ற னர். இதில் 1 என்பது மிகவும் லேசாக உடற்பயிற்சியை மேற்கொள்வது போன்றது.

உதாரணமாக அருகில் உள்ள பிரிட்ஜில் உள்ள பால் பாக்கெட்டை எடுக்க நடப்பது போன்றது. 10 என்ற அளவீடு தீவிரமான உடற்பயிற்சியை குறிக்கிறது. யாரும் உடற்பயிற்சி ஆலோசகர் உதவி இல்லாமல் இந்த அளவீட்டை எட்டக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே முடிந்த அளவு 3 முதல் 5 வரையிலான அளவுகளிலயே மித மான உடற்பயிற்சியை மேள்கொள்ளுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உங்கள் இதயத் துடிப்புக்கும் உடற்பயிற்சியின் தீவிர செயல்பாட்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. நீங்கள் வேகமாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இதயத் துடிப்பு என்பது எல்லோருக்கும் நார்மலாக இருப்பதில்லை.

அவர்களின் உடல் நல நிலை, இதய செயல்பாடு,மரபியல் சூழல் மற்றும் சகிப்புத்தன்மை பொருத்து மாறுபடும். இது இதயம் தொடர்பான உடற்பயிற்சி என்பதால் உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் இதயத் துடிப்பின் வரம்பைத் தெரிந்து கொள்ளுங்கள். அதே மாதிரி இரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரை எடுப்பவர்கள் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதற்கு முன் மருத்துவரிடம்ஆலோசித்து கொள்வது நல்லது.

ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது ஆக்ஸிஜன் ஏற்ற உடற்பயிற்சி உங்கள் இதய செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி வாரத்திற்கு 5 முதல் 7 நாட்கள் குறைந்தது 30 நிமிடங் களாவது இதயத்திற்கான உடற்பயிற்சியை மேற்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

நீங்கள் இந்த ஏரோபிக் உடற்பயிற்சி யை ஒவ்வொரு நாளும் கூட செய்து வரலாம் . உங்களுக்கு இது பழக்கமாகி விட்டால் தொடர்ந்து செய்வதில் சிரம ம் இருக்காது . இடையிடையே ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் வராது . அதுவே உங்களுக்கு மூட்டு வலி பிரச்சனைகள் இருந்தால் ரொம்ப கடினமான உடற்பயிற்சி செய்யாமல் இலே சான உடற்பயிற்சிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் . தேவைப்பட்டால் இடை இடையே ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள் .


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!