இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் இடம்பிடித்தது: என்ன வார்த்தை?
- Get link
- X
- Other Apps
கோலின்ஸ் டிக்ஸ்னரி கடந்த வருடத்தின் சொல் என லாக்டவுன் என்பதை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வார்த்தை உலக அளவில் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் இந்த வார்த்தையே தேர்ந்தெடுத்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஆங்கிலத்தில் பல்வேறு புதிய சொற்கள் கிடைத்துள்ளது. அவை ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஸ் டிக்சனரியில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா இரண்டாவது அலையில் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்று ரெம்டெசிவிர் (Remdesivir).
நாடு முழுவதும் இந்த மருந்தின் தேவை உச்சத்தில் இருந்தது. கொரோனா பாதித்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள் இந்த மருந்தை தேடி அலைந்தனர். சமூக வலைதளங்களில் இந்த மருந்து வேண்டி பல பதிவுகளை காண முடிந்தது. அவை வைரலாகியது. மிகவும் பிரபலமான இந்த பெயர் தற்போது ஆக்ஸ்போர்டு இங்கிலீஸ் டிக்ஸ்னரியில் இடம் பெற்றுள்ளது. தற்போது ஆக்ஸ்போர்டு இங்கிலீஸ் டிக்சனரியில் முழுமையாக திருத்தப்பட்ட 1000 வார்த்தைகளும், 700 புதிய சொற்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் சிஇஓ தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழியில் இந்த வருடம் புதிய வார்த்தைகளின் பயன்பாடு மற்றும் ஏற்கனவே உள்ள வார்த்தைகளில் மாற்றம் போன்றவற்றின் காரணத்தால் அடிக்கடி திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. இதற்காக மொழியியல் அறிஞர்கள் ஏராளமான வார்த்தைகளை தொகுக்க வேண்டியிருந்திருக்கிறது. இந்த ஆண்டின் சொல் இது தான் என வகைப்படுத்த முடியாத அளவுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு Self-isolate, Self-quarantine, infodemic, physical distancing போன்ற வார்த்தைகளை சேர்த்துள்ளது.
இந்நிலையில் கோலின்ஸ் டிக்ஸ்னரி கடந்த வருடத்தின் சொல் என லாக்டவுன் என்பதை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வார்த்தை உலக அளவில் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் இந்த வார்த்தையே தேர்ந்தெடுத்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர். உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் ஒருங்கிணைந்த அனுபவம் இது. கொரோனாவை எதிர்கொள்வதில் மக்கள் கூட்டாக இணைந்து செயல்பட்டனர் என்கிறது காலின்ஸ் டிக்சனரி.
கடந்த 2020ல் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மில்லியனில் கால்பங்கு லாக்டவுன் என்ற வார்த்தை பயன்பாடு இருந்ததாக கோலின்ஸ் தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய வருடம் வெறும் 4000 முறை மட்டுமே அந்த வார்த்தையின் பயன்பாடு இருந்ததாம். கொரோனா வைரஸ் ஊரடங்கு மக்கள் தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளை பாதித்துள்ளதாம்.
குறிப்பாக Coronavirus, social distancing, self-isolate, furlough, lockdown, key worker ஆகிய வார்த்தைகள் இந்த ஆண்டின் முக்கிய 10 வார்த்தைகளில் இடம் பெற்றுள்ளதாம். ஆக்ஸ்ஃபோர்டு டிக்சனரிகளில் இதன் மூலம் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள நிலையில், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்திய அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளான ஆதார், ஃஎப்ஐஆர், நான் வெஜ் போன்ற வார்த்தைகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ALSO READ ; 7,500 காயின்களை பயன்படுத்தி 9 மணி நேரத்தில் கிச்சனை மாடர்னாக்கிய பெண் - பாராட்டும் நெட்டிசன்கள்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment