நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே மாதத்தில் அடர்த்தியான தலைமுடிக்கு!.. இந்த தைலம் மட்டும் போதும்

இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என பாரபட்சமே இல்லாமல் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது முடி கொட்டுதல். இதற்கு கண்டகண்ட ஷாம்பூக்கள், எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும். எனவே வீட்டிலேயே மிக எளிமையான முறையில் செய்யக்கூடிய வெங்காய தைலத்தை கொண்டு அடர்த்தியான முடியை பெறலாம்.

தேவையான பொருட்கள் 

நல்லெண்ணெய்- 200 ML

 தேங்காய் எண்ணெய்- 200 ML 

சிறிய வெங்காயம்- 4 அல்லது 5 

காய்ந்த நெல்லிக்காய் துண்டுகள்- 1/2 கப் 

வெந்தயம்- 1/2 கப் 

கறிவேப்பிலை- 1 கப் 

மருதாணி இலைகள்- 1/2 கப் 

செம்பருத்தி பூக்கள்- 4 அல்லது 5 


செய்முறை 


ஒரு கனமான அடிப்பாகமுள்ள வாணலியை எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி தீயை மீடியமாக வைக்கவும்.
 முதலில் நல்லெண்ணெயையும் பின்னர் தேங்காய் எண்ணெயையும் வாணலியில் விட்டு எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது அதில் முதலில் வெந்தயத்தை இடவும். வெந்தயம் சிவக்க பொறிந்ததும் அதில் அடுத்ததாக நசுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் கருகக் கூடாதா அளவில் அதையும் மிதமாக வறுக்கவும். வெங்காயம் சிவக்க வறுபட்டதும் அடுத்ததாக காய்ந்த நெல்லிக்காய்த் துண்டுக்களைச் சேர்க்கவும்.

நெல்லிக்காய் பொறிந்ததும் அடுத்து கறிவேப்பிலை மற்றும் மருதாணி இலைகளைச் சேர்க்கவும். இலைகள் மொறு மொறுவென வறுபட்டதும் கடைசியாக செம்பருத்திப் பூக்களை இடவும். 5 அல்லது 6 நிமிடங்களுக்கு இதுவரை இட்ட பொருட்கள் அனைத்தும் சூடான எண்ணெய்க்குள் நன்கு மூழ்கி இருக்கட்டும். அப்போது தான் அவற்றிலிருக்கும் எசன்ஸ் மொத்தமும் எண்ணெய்க்குள் இறங்கும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் கழித்து எண்ணெய் மஞ்சள் நிறத்திலிருந்து இளம்பச்சை நிறத்திற்கு மாறியதும் அடுப்பை அணைக்கவும்.

எண்ணெயில் சூடு முழுவதுமாகத் தணிந்ததும். ஈரப்பதமற்ற ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு இந்த வெங்காயச் சாறு கலந்த கூந்தல் தைலத்தைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தும் முறை கூந்தல் உதிராமல் இருக்க மேற்கண்ட வெங்காயச் சாற்றுத் தைலத்தை தலைமுடியின் வேர் முதல் நுனி வரை மென்மையாகத் தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வாரம் இருமுறை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இப்படி மசாஜ் செய்து மறுநாள் கூந்தலை ஷாம்பூவில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!