நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கண்களில் நீர் வழிந்தால்..

மனதை உலுக்கும் சம்பவங்கள் நிகழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடும். கவலை, சந்தோஷம், கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்காட்டும் தன்மை கண்ணீருக்கு இருக்கிறது. உணர்ச்சிவசப்படும்போது கண்ணீர் வெளிப்படுவதற்கும், சம்பந்தமே இல்லாமல் கண்களில் இருந்து நீர் வழிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

கண்களை சுற்றி எப்போதும் கண்ணீர் சூழ்ந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்கள் வறண்டு போய்விடும். ஆனால் அளவுக்கு அதிகமாக கண்ணீர் சுரப்பதும் நல்லதல்ல. அதற்கான காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

* வறண்ட காலநிலை கொண்ட இடங்களில் வசிக்கும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்க வாய்ப்புள்ளது. அப்போது கண்களும் வறண்டு போகும். உடனே கண்கள் தானாகவே லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து நீரை சுரந்து கண்களை ஈரமாக்கும். வறண்ட பகுதி மட்டுமின்றி குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருந்து வேலை பார்த்தாலும் கண்கள் வறண்டு போகும். அப்படி கண்கள் வறண்டு போவதை தடுக்க அடிக்கடி கண்களை கழுவுவது நல்லது.

* பெரும்பாலானோர் கணினி, மடிக்கணினிகளில் நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள். அதன் காரணமாக கண்களில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருக்கிறது. கணினி திரையை பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும். இல்லாவிட்டால் கண்கள் வறண்டு போய்விடும். அப்போது ஈரப்பதத்தை உருவாக்குவதற்காக கண்களும் நீரை அதிகம் சுரக்க வேண்டியிருக்கும். தொடர்ந்து கண்கள் வறண்டு கொண்டிருந்தால் தேவைக்கு அதிகமாக கண்களில் நீர் வழியும் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகி விடும். ஆதலால் கண்களில் ஈரப்பதத்தை 
தக்கவைப்பதற்கு வேலைக்கு இடையே சில நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அது கண்கள் வறண்டு போவதை தடுக்கும். கண்களுக்கான பயிற்சிகளையும் சில நிமிடங்கள் செய்வது நல்லது.

* காண்டாக்ட் லென்ஸ்களை நீண்ட நேரம் அணிவதும் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். சிலருக்கு காண்டாக்ட் லென்ஸ் அணிந்ததும் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருக்கும். லென்ஸ் அணியும்போது கண்களில் நீர் சுரக்கும் பிரச்சினையை எதிர்கொண்டால் அந்த லென்ஸ்கள் சரியானதுதானா என்பதை ஆராய வேண்டும். கூடுமானவரை காண்டாக்ட் லென்ஸ்களை அணிவதை தவிர்ப்பது நல்லது.

* பெரும்பாலான பெண்கள் கண்களுக்கு போடும் ஒப்பனையை இரவில் துடைத்து நீக்குவதற்கு மறந்துவிடுகிறார்கள். அதனால் கண்களில் நீர் வழியும் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கண்களுக்கு அலங்காரம் தீட்டும் பொருட்களை உபயோகப்படுத்தியதும் கண்களில் எரிச்சலை உணர்ந்தால் அவற்றை மீண்டும் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. தூங்க செல்லும் முன்பு மறக்காமல் கண்களை சுற்றியிருக்கும் ஒப்பனையை நீக்கிவிட வேண்டும்.

* காற்றின் மூலம் தூசு கண்களில் பட்டால் அது அலர்ஜியை உருவாக்கும். அப்போது கண்களை கசக்கினால் கண்களில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறும். அதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத அளவுக்கு தூசுகளை அப்புறப்படுத்த வேண்டும்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!