நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டீன் ஏஜ் பெண்கள் விரும்பும் ‘ப்ளாங்க்' உடற்பயிற்சி

இந்தப் பயிற்சியை உடற்பயிற்சிக்கு முன் வார்ம்-அப் பயிற்சியாகவோ, அன்றாடப் பயிற்சிகளில் ஒன்றாகவோ தினமும் செய்யலாம். இடுப்புக்கு மேலிருக்கும் பகுதிகளுக்கும், வயிற்றுப் பகுதிக்கும் இந்தப் பயிற்சி வலு சேர்க்கும்.
டீன் ஏஜ் பெண்களின் விருப்பமான உடற்பயிற்சிகளில், ‘ப்ளாங்க்’ வகைக்கு மிக முக்கிய இடம் உண்டு. அதிலும் ‘ப்ரோன் ப்ளாங்க்’ உடற்பயிற்சியை, வீட்டில் இருந்தபடியே செய்து, உடல் ஆரோக்கியத்தை பேணலாம். அது என்ன ப்ரோன் ப்ளாங்க் என்கிறீர்களா...? இது `ப்ளாங்க்' வகைப் பயிற்சியின் நீட்சிதான். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கான `ஸ்பைடர்மேன் ப்ளாங்க்' இதனோடு தொடர்புடையதுதான்.

உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும், கலோரிகளை குறைக்க விரும்புபவர்களுக்கும் இது உதவும். இந்தப் பயிற்சியை உடற்பயிற்சிக்கு முன் வார்ம்-அப் பயிற்சியாகவோ, அன்றாடப் பயிற்சிகளில் ஒன்றாகவோ தினமும் செய்யலாம். இடுப்புக்கு மேலிருக்கும் பகுதிகளுக்கும், வயிற்றுப் பகுதிக்கும் இந்தப் பயிற்சி வலு சேர்க்கும். முக்கியமாக இதயச் செயல்பாடும், ரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவும்.

இதை எப்படிச் செய்வது?

தரையில் குப்புறப்படுத்துக்கொண்டு, முழங்கையை மடித்து ஊன்றி, கால் விரல் களையும் ஊன்றி, உடலை மேல்நோக்கி உயர்த்தவும். தரையில் இருந்து உடல் பகுதி முழுவதும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். அடுத்ததாக, வலது பக்க கை மூட்டுக்கு அருகில், வலது பக்க காலைக் கொண்டு வர வேண்டும். பிறகு, காலை பின்னுக்கு இழுக்கவும். இதேபோல, இரண்டு கால்களிலும் செய்யலாம். கால் மூட்டு, கையின் மூட்டைத் தொடுவதுதான் இந்தப் பயிற்சியின் அடிப்படை. இந்தப் பயிற்சியை நன்கு பழகிய பின்னர், கால் மூட்டு கையின் மேல்பகுதியைத் தொடும்வரை உயர்த்தலாம். ஒரு பயிற்சிக்கு 15 முதல் 30 விநாடிகள் வரை நேரம் எடுத்துக்கொண்டு, 10 முதல் 15 முறை செய்யலாம்.

நன்மைகள்:

உடற்பயிற்சி செய்பவர்கள், ஒவ்வொரு பயிற்சியும் எந்தெந்தப் பகுதிகளுக்கானது என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ப்ரோன் ப்ளாங்க் மற்றும் ஸ்பைடர்மேன் ப்ளாங்க் பயிற்சியை தொடர்ந்து செய்தால், உடல் எடை சீராகும். வயிற்றைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுப்பெறும். அந்தப் பகுதி யிலுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரையும். உடலின் முன்புறம் மட்டுமல்லாமல், பின்புறத்துக்கும் இந்தப் பயிற்சி மிகவும் நல்லது. சீரான உடலமைப்பு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு, ப்ளாங்க் சிறந்த பயிற்சி. குறிப்பாக, ஓடுபவர்களுக்கும், கால்பந்து வீரர்களுக்கும் ஏற்றது. எளிதில் சோர்வு அடைபவர்கள் இந்தப் பயிற்சியை தினமும் காலையில் செய்துவந்தால், புதுத் தெம்பைப் பெறலாம். தினசரி வேலைகளை புத்துணர்வோடு செய்வதற்கு இந்தப் பயிற்சி உதவும். முதுகுவலிக்கும், இந்தப் பயிற்சி மிகச் சிறந்த தீர்வு தரும்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!