நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வேக வைக்காத முட்டை உடலுக்கு நல்லதா? கெட்டதா?

காலை உணவுடன் முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நிறைய பேர் முட்டையை அப்படியே உடைத்து குடிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது.
அதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. முட்டையின் உள்பகுதியான மஞ்சள் கருவில் இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. முட்டையில் இருக்கும் வைட்டமின்கள் இதயம், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும். பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. முட்டையை அப்படியே உடைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். சருமம் சிவத்தல், அரிப்பு, வீக்கம், வயிற்று போக்கு, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். பயோட்டின் குறைபாடு வைட்டமின் பி 7, வைட்டமின் எச் என்றும் அழைக்கப்படுகிறது.

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அல்புமினை உட்கொள்ளும்போது உடல் பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாகிறது. இதன் காரணமாக தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகமாக இருக்கும். இது சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். கோழிகளின் குடல் பகுதியில் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா காணப்படும். அது முட்டை ஓட்டின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பரவி இருக்கும். சால்மோனெல்லாவை நீக்க அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கவேண்டும். அதை விடுத்து முட்டையை அப்படியே குடித்தால் பாக்டீரியாக்களால் பாதிப்பு நேரும்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!