இருமல் நிற்க, பல் சொத்தையைத் தடுக்க- சிறு குறிப்புகள்
- Get link
- X
- Other Apps
புதினா இலையை நன்றாகக் கழுவி நிழலில் உலர்த்தி எடுக்கவும். காய்ந்ததும் அதனுடன் உப்பு சேர்த்துப் பல் தேய்க்கவும். இப்படிச் செய்தால் பல்வலி, சொத்தை வராது. பல்லும் வெண்மையாக இருக்கும்.
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நம் உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.
ஆய்வுகளும் உணவுப் பழக்க வழக்கமே நம் ஆரோக்கியத்தை, உடல்நலத்தை தீர்மானிப்பதாக எடுத்துரைக்கின்றன. அதனால்தான் உணவே மருந்து என்பது நம் பாரம்பரிய மருத்துவத்தின் பெருவாசகமாக இருந்து வருகிறது.
இந்த வகையில் உடலில் ஏற்படும் சிறு சிறு தொல்லைகளுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சில மருத்துவத்திற்கான டிப்ஸ் இதோ:
வெயிலுக்கு வரும் வேனல் கட்டிக்கு உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்பை எடுத்துக் கொஞ்சம் பொடி செய்து, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்து கட்டி வந்த இடத்தில் போடவும். கட்டி பழுத்து உடைந்துவிடும்.
வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலுக்கு தயிரை நன்றாகக் கடைந்து நீர் மோராகச் செய்து, அதில் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் விட்டுக் குடித்துவந்தால் சரியாகிவிடும்.
ஒரு கோப்பை விளக்கெண்ணெயை எடுத்து, அத்துடன் சிவந்த மிளகாய் பழத்தைச் சேர்த்து அரைத்து, நன்றாகக் குழைத்துக் காலில் தடவி பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து, அரிசி களைந்த நீரில் கல்உப்பு சேர்த்துச் சூடுபடுத்தி, காலை அதில் சிறிது நேரம் வைத்தால் கால் வலிக்கு இதமாக இருக்கும்.
ஒரு ஸ்பூன் மிளகு, 3 ஸ்பூன் திப்பிலி இரண்டையும் கொஞ்சம் நெய் விட்டு வறுத்து, பொடி செய்து அதனுடன் காய்ந்த திராட்சையைப் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலையும் ஒரு சிட்டிகை சாப்பிடவும். அத்துடன் பாலும் சாப்பிட்டால் இருமல் நின்றுவிடும்.
புதினா இலையை நன்றாகக் கழுவி நிழலில் உலர்த்தவும். காய்ந்ததும் அதனுடன் உப்பு சேர்த்துப் பல் தேய்க்கவும். பல்வலி, சொத்தை வராது. பல் வெண்மையாக இருக்கும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி தரும் என்று கூறப்படுகிறது.
வேப்பம்பூ பித்தத்தை நிறுத்தும், வயிற்றுப்பூச்சியை ஒழிக்கும். வேப்பம்பூவில் துவையல், ரசம் வைத்துச் சாப்பிடலாம். வறுத்து, உப்பு சேர்த்துச் சாதத்தில் போட்டும் சாப்பிடவும் பயனளிக்கும்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment