மதியம் சாப்பிட்டதுமே தூக்கம் வருதா..? அதற்கு என்ன காரணம் தெரியுமா..?
- Get link
- X
- Other Apps
நீங்கள் சாப்பிட்ட பிறகு உங்கள் ஆற்றல் மட்டம் (எனர்ஜி லெவல்) எந்த நிலையில் இருக்கிறது என்பதில் இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது.
சாப்பிட்ட பிறகு சோர்வாக, மந்தமாக அல்லது தூக்கம் வருவது போல ஏன் உணர்கிறோம்? இது ஏதாவது நோய்க்கான அறிகுறியா? சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது போல தோன்றுவதற்கான காரணங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
நம்முடைய உடலுக்கு ஆற்றல் தருவது உணவு தான். எந்த செயல் செய்வதாக இருந்தாலும், ஆற்றல் தேவை, அதற்கு போதுமான உணவு தேவை. ஆனால், உணவே நேர்மாறாக மாறும்போது நம் உடலில் என்ன நடக்கும்? எதற்காக சாப்பிடுகிறோம்? நாள் முழுவதும் செயல்பட, நம் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரும் எரிபொருள் உணவு. குறிப்பிட்ட கால இடைவேளைகளில் உண்பது, உடல் சோர்வை நீக்கி, நமக்குத் தேவையான ஆற்றலைத் தரும். ஆனால், ஆற்றல் அளிக்கும் அதே உணவு, ஒரு நபர் சாப்பிட்ட பிறகு சோர்வாகவும், சோம்பலாகவும், தூக்கமாகவும் உணர வைக்கிறது என்பதை நினைக்கும் போது, கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
நீங்கள் சாப்பிட்ட பிறகு உங்கள் ஆற்றல் மட்டம் (எனர்ஜி லெவல்) எந்த நிலையில் இருக்கிறது என்பதில் இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்சுலின் என்பது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை நிர்வகிக்கும் ஹார்மோன். எனவே, நீங்கள் உணவை மென்று உண்ணும் போது, உங்கள் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு உங்கள் இரத்த சர்க்கரை அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. நீங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது, இன்சுலின் அளவு குறைகிறது. இது சிலரை சோர்வாகவும் சோம்பலாகவும் உணர வைக்கும். ஆனால், இது மிகவும் இயல்பானது என்பதால், தூக்கக்கலக்கம் நீண்ட நேரம் நீடிக்கக்கூடாது.
மதிய உணவு உண்டவுடன் பலருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு வேளை, சாப்பிட்ட பிறகு, நீங்கள் நீண்ட நேரம் சோர்வாக உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும் அல்லது ஒரு உணவியல் நிபுணரின் உதவியைப் பெறுங்கள். சாப்பிட்ட பிறகு சோம்பலான உணர்வு மற்றும் தூக்கம் ஏற்படுவது மிகவும் இயல்பானது. எல்லாவற்றிற்கும் மேலாக, உணவை ஜீரணிப்பது மிகவும் கடினமாக பணியாகும். ஆனால், ஏன் இப்படி ஆகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிக அளவிலான உணவைத் தவிர்க்கவும் (ஹெவி மீல்ஸ்) :
நீங்கள் சாப்பிட்ட பிறகு சோர்வாக இருப்பது, நீங்கள் என்ன உணவு வகைகளை சாப்பிட்டீர்கள் மற்றும் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதோடு தொடர்பு கொண்டது. உங்கள் உணவின் அளவு அதிகமாக இருந்தால் செரிமானத்துக்காக, அதை தயார் செய்வதில் உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். எனவே, ஹெவி மீல்ஸ் எனப்படும் அதிக அளவிலான உணவை ஜீரணிக்க அதிக ஆற்றல் செலவழிப்பதைப் போல உணர்ந்தால், நீங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்து, நார்ச்சத்து உணவுகள் அல்லது தின்பண்டங்களை சாப்பிட முயற்சிக்கவும்.
செரிமான அமைப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது:
நீங்கள் எந்த வேலை செய்வதாக இருந்தாலும், அதற்கு ஆற்றல் தேவை. அது, உங்கள் அன்றாட வேலையாக இருந்தாலும் சரி, உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி. ஏன், நீங்கள் சுவாசிக்க வேண்டும் என்றாலும் உங்கள் உடலுக்கு ஆற்றல் தேவை. இந்த சக்தியை நம் உணவில் இருந்து தான் பெறுகிறோம். நம் உடலில் இருக்கும் செரிமான கட்டமைப்பால், உணவு குளுக்கோஸாக உடைக்கப்படுகிறது. புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு சக்தியாக செயல்படும் கலோரிகளை வழங்குகின்றன. தொடர்ந்து செரிமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தால், சோர்வாக உணர்வீர்கள்.
உணவுப்பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது:
புரதம் நிறைந்த உணவுகளில் செரோடோனின் இருக்கக்கூடும். இது ஒருவரின் மூளைக்கு தூக்கத்தை உருவாக்கும் சமிக்ஞைகளைத் தூண்டலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம். புரோட்டீன் ரிச் டயட் எனப்படும் அதிகளவு புரதம் நிறைந்த உணவுகளான சோயா, முட்டை, கீரை, மீன், டோஃபு போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், செர்ரி மற்றும் வாழைப்பழங்கள் போன்ற பழங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளில் உள்ள தாதுக்களில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது. இவை உங்கள் தசைகளை தளர்த்த நியூரோ சிக்னல்களையும் அனுப்புகிறது. எனவே, சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதை தவிர்க்க முடியாது.
ஸ்லீப் சைக்கிள் - தூக்க சுழற்சி :
நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு, ரிலாக்சாக உணர்ந்தால், உங்கள் உடல் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமா என்று நினைக்கும். குறிப்பாக, முந்தைய நாள் இரவு நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால், சாப்பிட்ட பிறகு உடல் ஓய்வு தேடும், தூக்கம் வரும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், தூங்கும் பழக்கத்தை முறைப்படுத்துதல் மற்றும் சிறப்பான இரவு தூக்கத்தைப் பெற, தினமும் உடற்பயிற்சி செய்வது உதவியாக இருக்கும். இவை உணவுக்குப் பிறகு சோம்பலாக, சோர்வாக தோன்றுவதைக் குறைக்க உதவும்.
ஃபிசிக்கல் ஆக்டிவிட்டி – சுறுசுறுப்பாக இயங்குதல் :
தினமும் உடற்பயிற்சி செய்வது ஆற்றலை அதிகரிக்கவும், உடல் சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது. இன்னும் எளிமையாகக் கூற வேண்டுமென்றால், தவறாமல் உடற்பயிற்சி செய்வது, உங்கள் உடலை ஃபிட்டாகவும், நல்ல வடிவத்திலும் வைத்திருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும், சோர்வு மற்றும் அதிகப்படியான தூக்கத்தைக் குறைக்கவும் உதவும். உங்கள் அன்றாட செயல்பாடுகளில் உடற்பயிற்சி செய்வதையும் சேர்ப்பது உங்கள் ஆற்றலை மேம்படுத்தி, வலிமையாக்கும். தினசரி, 30 நிமிட உடற்பயிற்சி என்ற குறைவான அளவில் இருந்தாலும் கூட, நீங்கள் வலிமையாகவும், சோர்வாகவும் உணரலாம்.
நீங்கள் சாப்பிட்ட உடனே மது அருந்துவதைத் தவிர்க்கவும். மதுபானம், உணவுக்குப் பிறகு தூக்கத்தை உண்டாக்கும் மயங்க வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
சில நேரங்களில், சாப்பிட்ட பிறகு எப்போதுமே சோர்வாக இருப்பது, ஏதேனும் நோய் அறிகுறியாக இருக்கலாம். அவற்றில் பின்வருபவை அடங்கும்:
* இரத்தச் சர்க்கரைக் குறைவு – ஹைபோ-கிளைகேமியா
* குறிப்பிட்ட உணவு ஒவ்வாமை அல்லது இன்டாலரன்ஸ் (செரிமானம் செய்ய முடியாது) (லாக்டோஸ் இன்டாலரன்ஸ் போன்றவை)
* தூக்கமின்மை
* இரத்த சோகை அல்லது தலசீமியா போன்ற குறைபாடுகள்
* தைராய்டு
நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்தால், மேலே இருக்கும் ஏதோ ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைகளை பற்றி ஆலோசிக்கவும்.
சாப்பிட்டப் பிறகு வரும் மயக்க உணர்வைத் தடுப்பது எப்படி:
* நிறைய தண்ணீர் குடிக்கவும், உடலில் நீர்ச்சத்து வற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
* வைட்டமின் சி நிறைந்த பழங்களை கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுங்கள். * காய்கறிகள் (முக்கியமாகக் கீரைகள்), போன்ற பல விதமான உணவுகளை உள்ளடக்கிய பேலன்ஸ்டு உணவுப்பழக்கத்தைக் கடைபிடியுங்கள்.
* இரவில் நீங்கள் தூங்கும் நேரத்தை அதிகரிக்கவும்
* தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
* மது அருந்துவதை தவிர்க்கவும்.
ALSO READ :
- Get link
- X
- Other Apps





Comments
Post a Comment