இம்யூனிட்டிக்கு பெஸ்ட்… செலவு மிச்சம்… கருவேப்பிலை குழம்பு சிம்பிள் செய்முறை!
- Get link
- X
- Other Apps
உடலில் ஏற்படும் பலவகையான நோய்களுக்கும் கருவேப்பிலை உன்னத மருந்தாக பயன்படுகிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை தாவரங்களில் கருவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துவதில் இருந்து உடலில் ஏற்படும் பலவகையான நோய்களுக்கும் கருவேப்பிலை உன்னத மருந்தாக பயன்படுகிறது.
கருவேப்பிலை வைத்து கருவேப்பிலை சாதம், தொக்கு, என பலவகை உணவுகளை செய்யலாம். அந்த வகையில் தற்போது கருவேப்பிலை வைத்து குழம்பு செய்வது எப்படி என்பதை பார்போமா?
முதலில் அடுப்பில் கடாயை வைத்துவிட்டு, எண்ணெய் 1 ஸ்பூனும், மிளகும் அரை ஸ்பூனும், சீரகம் அரை ஸ்பூனும், தோல் உரித்த பூண்டு பல் -4, பொடியாக நறுக்கப்பட்ட பெரிய வெங்காயம் ஒன்றும், அரை தக்காளியும் சேர்த்து நன்று வதக்க வேண்டும். பின்னர், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
கிடைசியாக, அடுப்பை ஆஃப் செய்வதற்கு முன்பு 1 ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து ஒன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் சூடு குறைந்ததும், அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.
இதற்கிடையில், சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பை தாளிக்கும் பிராசஸ் இதோ
தேவையான பொருள்கள்:
கடுகு – 1/2 ஸ்பூன்,
சீரகம் – 1/2 ஸ்பூன்,
பெருங்காயம் – 1/4 ஸ்பூன்,
தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10
அடுப்பில் கடாயை வைத்துவிட்டு, நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி மேலே உள்ள பொருள்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருப்பதை கடாயில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
தொடர்ந்து, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன் ஆகியவற்றை அத்துடன் சேர்ந்து, கரைத்து வைத்திருந்த புளியும் சேர்க்க வேண்டும்.
பின்னர், குழம்புக்கு தேவையான அளவு உப்பு தூவி, நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடுங்கள். அவ்வளவு தான், இம்யூனிட்டிக்கு சிறந்த கருவேப்பிலை குழம்பு தயாராக உள்ளது.
காய்கறி இல்லையே எப்படி குழம்பு வைக்கிறதுனு யோசிக்காமல், தாராளமாக இதை முயற்சி செய்து பாருங்க…
ALSO READ : தினமும் ஒரு கப் தயிர் இவ்ளோ ஆபத்தை தடுக்கும்… பெண்களே, இந்தச் செய்தி உங்களுக்கு!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment