நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடை குறைய உணவில் பாசிப்பருப்பை கட்டாயம் சேர்க்கவும்..!!

 பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அத்தனைய பாசிப்பருப்பின் அளப்பரிய நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.


பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அத்தகைய பாசிப்பருப்பின் அளப்பரிய நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

பாசிப் பருப்பில் காணப்படும் சத்துக்கள்

பருப்பில் வைட்டமின் 'ஏ', 'பி', 'சி' மற்றும் 'ஈ' நிறைந்துள்ளதோடு, பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட், நார்ச்சத்து ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது.  கூடுதல் சிறப்பாக கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இந்த பருப்பு பல நோய்களில் இருந்து உடலைப் பாதுகாப்பது மட்டுமின்றி, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் இதுவே காரணம்.

பாசிப்பருப்பு காய்ச்சல் மற்றும் மலச்சிக்கல் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காய்ச்சல் காரணமாக பலவீனமாக உணரும் நிலையில், பருப்பை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். டெங்கு போன்ற ஆபத்தான நோய்களில் இருந்தும் பருப்பு பாதுகாக்கிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய முழுவதிலும் உணவுகளில் பாசிப்பருப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து பருப்பு வகைகளும் புரதம் மற்றும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் நிறைந்தவை தான். ஆனால் இவை அனைத்திலும் பாசி பருப்பு சிறந்ததாக கருதப்படுகிறது. உடல் எடை ஏறக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள், பாசிப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் வேறு பல ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

பாசிப்பருப்பின் ஆரோக்கிய நன்மைகள்

1. பாசிப்பருப்பை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

2. பாசிப்பருப்பில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

3. புரதம் நிறைந்த பருப்பு உங்கள் பசியைக் குறைத்து எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

4. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் போன்ற தீவிர நோய்களைத் தவிர்க்கலாம்.

5. இது எல்டிஎல் கொழுப்பைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது, இதன் காரணமாக இதயப் பிரச்சனைகளைத் தடுக்க இதை உட்கொள்ள வேண்டும்.

6. பாசிப்பருப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக அமிலத்தன்மை, மலச்சிக்கல், பிடிப்புகள் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

பாசிப்பருப்பை உட்கொள்ள சரியான வழி

உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கருத்துப்படி, அது பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பாசிப்பருப்பை விட, முளை கட்டப்பட்ட பாசிப்பயறை அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலவீனத்தைப் போக்கலாம் என்கிறார். ஏனெனில் இதில் அதிக அளவு புரதம், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இந்த தனமைகள் பல தீவிர நோய்களில் இருந்து  நம்மை பாதுகாக்கிறது.


ALSO READ : எடையை குறைக்க உதவும் முறையான தூக்கம்...!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்