நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஓட்ஸ் இத்தனை அற்புத சத்துக்களை கொண்டுள்ளதா ? இதனை சாப்பிடுவதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்......

 ஓட்ஸ் என்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய காலை உணவாக விளங்குகிறது.


ந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது.

மேலும் உங்கள் உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது.

இதனை காலை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றது.


தற்போது ஓட்ஸில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன என்பதையும் இதனை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதையும் பார்ப்போம். 


ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.


வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.


ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயராது.


தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஓட்ஸ் கொண்டு செய்யபட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது.


மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி காரணமாக பெண்கள் சிலர் உடல்ரீதியாக பலமிழந்து காணப்படுவார்கள். இவர்கள் ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வர அவர்களின் உடல்சோர்வு நீங்கும்.


ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.


தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது. 



ALSO READ : இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்ததால் ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்