உடலில் உள்ள முடியை அகற்றுவதற்கு வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு இதனை பயன்படுத்தக் கூடாது.
முக அழகை மேம்படுத்துவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. எல்லோருடைய சருமத்திற்கும், எல்லா பொருட்களும் ஒத்துக்கொள்ளாது. சருமத்தின் தன்மையை பொறுத்து பராமரிப்பும் மாறுபடும். அத்தகைய பொருட்கள் குறித்தும், அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பார்ப்போம்.
காலாவதியான சன்ஸ்கிரீன்: நிறைய பேர் கோடை காலத்தில் மட்டும்தான் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவார்கள். வெப்பத்தின் தாக்கம் குறைய தொடங்கியதும் அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைப்பார்கள். அப்படி பத்திரப்படுத்தி வைக்கும்போது காலாவதி தேதியை கவனிக்காமல் மீண்டும் பயன்படுத்தினால் ஒவ்வாமை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். மேலும் சருமத்திற்கு பொருத்தமான சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பதும் அவசியமானது.
ஷாம்பு:
இது தலைமுடியை சுத்தம் செய்வதற்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கில் இருந்து விடுபடவும் உதவும். அதேவேளையில் ஷாம்பு கொண்டு முகத்தை சுத்தம் செய்யக்கூடாது. அவை கூந்தல் முடியை சுத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டவை. சருமத்தின் மென்மையான மூலக்கூறுகளை கையாளுவதற்கு அவை உருவாக்கப்படவில்லை. ஷாம்புவை கொண்டு முகத்தை கழுவினால் சருமம் உலர்வடையும். பளபளப்பு தன்மையும் மாறிவிடும்.
எலுமிச்சை சாறு:
இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அது உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் எலுமிச்சை சாறை அப்படியே சருமத்தில் பூசுவது நல்லதல்ல. மேலும் எலுமிச்சை பழத்தை அடிப்படையாக கொண்ட சரும பராமரிப்பு பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன.
அவை சருமத்தை பளபளப்பாகவும், வெண்மையாகவும் மிளிரச் செய்ய உதவுவதாக நம்பப்படுகிறது. ஆனால் அதில் உள்ளடங்கி இருக்கும் அதிக அளவு சிட்ரிக் அமிலம் சருமத்தை சேதப்படுத்தக்கூடும். சருமத்தில் எரிச்சல், வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
பற்பசை:
கரும்புள்ளிகள், முகப்பருவை போக்குவதற்கு பற்பசையை உபயோகிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் முகத்தில் பற்பசையை பயன்படுத்துவது நோய்த்தொற்றுகள், காயங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். சருமத்திற்கு எரிச்சலையும் உண்டாக்கும். பற்பசையை பருக்கள் மீது பூசுவது நல்ல பலனைத் தரும் என்று சிலர் பரிந்துரைப்பதுண்டு.
ஆனால் முகத்தில் பற்பசையை பூசும்போது மெலனின் உற்பத்தி அதிகரிக்கக்கூடும். அவை பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறமாற்றம் அல்லது கரும்புள்ளிகள் உருவாகலாம். பற்பசையில் பயன்படுத்தப்படும் புதினா, சருமத்தை மேலும் எரிச்சலடையச் செய்து கறைகளை ஏற்படுத்தும்
தேங்காய் எண்ணெய்:
சரும அழகுக்கு தேங்காய் எண்ணெய் சிறப்பானது என்ற கருத்து நிலவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலம் உள்ளது. ஆனால் அது 90 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பாகும். இது சருமத்தின் துளைகளை அடைத்துவிடும். உடலில் எவ்வளவு வேண்டுமானாலும் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். ஆனால் முகத்திற்கு பயன் படுத்தக்கூடாது.
குறிப்பாக எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய்யை அறவே தவிர்த்துவிட வேண்டும். முகத்தில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும்போது சருமத்தில் உறிஞ்சப்படுவதற்கு அதிக நேரம் எடுக்கும். எண்ணெய் சருமமாக இருந்தால் சரும துளைகளை அடைத்து முகப்பரு பிரச் சினையை உண்டாக்கிவிடும்.
வேக்ஸ்:
உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது முகம் மிகவும் மென்மையாக இருக்கும். உடலில் உள்ள முடியை அகற்றுவதற்கு வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு இதனை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் முகத்திற்கு வேக்ஸை பயன்படுத்தினால் முடி வளர்வதற்குத்தான் வழிவகுக்கும்.
Comments
Post a Comment