நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம்! மனைவிக்கு ஓடும் காரில் பிரசவம் பார்த்த கணவர்.. பின்னர் நடந்தது என்ன?

 அமெரிக்காவில் பெண் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மெரிக்காவின் Philadelphia பகுதியில் வசித்து வருபவர் Yiran Sherry (33). இவரின் கணவர் Keating Sherry (34) இந்நிலையில் கர்ப்பிணியான Yiran Sherry மற்றும் அவரது கணவர் இருவரும் Tesla காரில் பயணம் செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் Keating Sherryக்கு எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சாலை நெரிசலில் சிக்கிய இருவரும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் திண்டாடியுள்ளனர். இதையடுத்து Keating Sherry காரை ஆட்டோ பைலட் மோடுக்கு மாற்றியதோடு காரை மருத்துவமனைக்கு செல்ல உத்தரவிட்டுள்ளார்.

அதன்பிறகு அவர் பிரசவ வலியால் துடித்த தன் மனைவிக்கு உதவி செய்ய தொடங்கினார். அவர் தனது மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு வயிற்றை அழுத்த தொடங்கினார். 20 நிமிடத்திற்கு பிறகு மருத்துவமனையில் கார் நுழையும் போது Yiran Sherryக்கு குழந்தை பிறந்தது.


அப்போது மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் புதிதாக பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியுள்ளனர். டெஸ்லா காரில் பிறந்த குழந்தையை மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் `டெஸ்லா பேபி’ என்று அழைக்க தொடங்கினர்.

இதையடுத்து இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. டெஸ்லா காரில் பிறந்ததால், தங்கள் குழந்தைக்கு `டெஸ்’ என்று பெயர் சூட்டலாம் என Sherry தம்பதியினர் ஆலோசித்து வருகின்றனர். 



ALSO READ : உங்கள் முன்னாள் காதல் பற்றி நினைப்பதை நிறுத்த முடியவில்லையா? இப்படி முயற்சி செய்து பாருங்கள்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்