நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல செல்வத்துக்கும் அடிப்படை இந்த மஞ்சள் மசாலா......

 ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது மஞ்சள் கடுகு   


மஞ்சள் கடுகு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதேபோல, வாஸ்து படி, மஞ்சள் கடுகு (yellow mustard) மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மஞ்சள் கடுகு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. வீட்டில் செல்வத்தை தங்க வைக்கும். 

முதலில் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துக் கொள்வோம். மஞ்சள் கடுகில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பல பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. தசை வலி, சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் கொடுக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் கடுகில் உள்ளன, புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கவும் மஞ்சள் கடுகு உதவுகிறது.   

கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த உதவும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் (Polyunsaturated fats) நிறைந்துள்ள மஞ்சள் கடுகு, LDL எனப்படும்  'கெட்ட' கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. அதோடு, உடலில் உள்ள HDL எனப்படும் 'நல்ல' கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. 

மஞ்சள் கடுகு வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். ஒரு டீஸ்பூன் மஞ்சள் கடுகு எண்ணெயை வாயில் விட்டு கொப்பளித்த பிறகு வாயை தண்ணீரால் நன்கு கழுவவும். துர்நாற்றம் தூர ஓடிப்போகும்.

மஞ்சள் கடுகில் பீட்டா கரோட்டின், புரதம், இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. மஞ்சள் கடுகு எண்ணெயால்  உச்சந்தலையில் தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், ரத்த ஓட்டம் அதிகரித்து, முடி வளர்ச்சி அதிகரிக்கும். 

அதுமட்டுமல்ல, மஞ்சள் கடுகில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகியவை எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. உங்கள் தினசரி உணவில் மஞ்சள் கடுகை சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

நாம் வழிபடும் இடத்தில் தூவி, மஞ்சள் கடுகையை  வீடு முழுவதும் தெளிக்கவும். இதன் காரணமாக, வீட்டில் நேர்மறை ஆற்றல் உள்ளது. இதனுடன், உணவு மற்றும் பணத்தின் செழிப்பு வீட்டில் இருக்கும்.

பணப் பற்றாக்குறை இருப்பவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கங்கை நீரால் மஞ்சள் கடுகை சுத்தீகரித்து மஞ்சள் துணியில் கற்பூரம், சிறிது பாசிப்பருப்பைக் கட்டி வீட்டின் பிரதான வாசலில் தொங்க விடுங்கள். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் மஞ்சள் கடுகுகளை தூவி வைக்கவும். இதனால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!