பொதுவாக சிலருக்கு எவ்வளவு தான் முகத்தை பராமரித்தாலும் வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.
இது சருமத்தில் மெலனின் என்னும் நிறமியின் உற்பத்தி அதிகமாவதால் ஏற்படுகிறது.
இந்த கருமை நிறத்தை இயற்க்கை முறையில் போக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
- ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் அதற்கு சமஅளவில் தேனையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சாதாரண நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமை மறையும்.
- 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை வாயைச் சுற்றி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- 1 டீஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்த, அத்துடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீம் சிறிது சேர்த்து கெட்டியான பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி உலர வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
- ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் கலவையை சரிசம அளவில் எடுத்து கலந்து, வாயைச் சுற்றி தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
- இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை வாயைச் சுற்றி தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் நீரால் கழுவ வேண்டும். இப்படி 2-3 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, வாயைச் சுற்றி தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். சர்க்கரையில் உள்ள க்ளைகோலிக் அதிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, வெள்ளையாக்கும்.
- 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை வாயைச் சுற்றி தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 15 நிமிடம் கழித்து, நீரால் கழுவினால், வாயைச் சுற்றியுள்ள கருமை நீங்கும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பின்பற்ற நல்ல பலன் கிடைக்கும்.
- 1 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் முழுவதும் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- 2 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 3-5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு 5 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் வாயைச் சுற்றியுள்ள கருமை மெதுவாக குறைவதைக் காணலாம்.
- ஒரு துண்டு உருளைக்கிழங்கை அரைத்தோ அல்லது சாறு எடுத்தோ, வாயைச் சுற்றி தடவி, நன்கு காயும் வரை அல்லது 20 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
Comments
Post a Comment