வீட்டில் மோர் இருக்கா? ஓவர் கொலஸ்ட்ரால் உங்களுக்கு பிரச்னையே இல்லை!
- Get link
- X
- Other Apps
கொழுப்பு இழப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினைகளுக்கு வீட்டில் தயார் செய்யும் மோர் சிறந்தது.
பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பானாங்களில் ஒன்றாக மோர் உள்ளது. இது கோடை காலத்தில் உடல் நீரேற்றத்துடன் இருக்கவும், வெப்பத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும், இதன் பல ஆரோக்கிய நன்மைகளை அறிந்த மக்கள் பலர் ஆண்டு முழுவதும் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதை விரும்புகிறார்கள்.
இந்த அற்புத மோரை கடைகளில் வாங்கிவதற்கு பதிலாக நம்முடைய வீடுகளிலேயே எளிதில் தயார் செய்து விடலாம். அந்த வகையில், நம்முடைய வீட்டிலே எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்பதற்கான சிம்பிள் செய்முறையை ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் தனது சமீபத்திய இன்ஸ்டா பதிவில் பகிர்ந்துள்ளார். மேலும், மோர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
தேவையான பொருட்கள்:
தயிர் – ½ கப்
தண்ணீர் – 1.5 கப்
ஆளி விதைகள்
சீரகம்
வெந்தய விதைகள்
மோர் சிம்பிள் செய்முறை
முதலில், தயிர் மற்றும் தண்ணீரின் அளவுகளை எடுத்து, ஒரு மர கர்னர் (மாதினி) பயன்படுத்தி நன்கு கலக்கவும். பிறகு அவற்றை தனியாக எடுத்து வைத்துவிடவும்.
இப்போது, ஆளி விதைகள், சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, அனைத்தையும் நன்றாக பொடியாக அரைக்கவும்.
இறுதியாக, மோரை ஒரு கிளாஸில் எடுத்து, விதைகளைப் பயன்படுத்தி நீங்கள் தயாரித்த கலவையில் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.
பிறகு அவற்றை நன்றாக கலந்து கொண்டு பருகி மகிழவும்.
மதிய உணவு அல்லது மதிய உணவிற்கு பின்னர் 3-4 மணிக்கு இந்த அற்புத மோர் பானத்தை பருகலாம். கொழுப்பு இழப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினைகளுக்கு இது சிறந்தது என்று முன்முன் கனேரிவால் கூறுகிறார்.
ALSO READ : மனதை லேசாக்கும் நார்ச்சத்து உணவுகள்.......
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment