உடல் எடையை குறைப்பதில் பருப்பு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. பருப்புகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கின்றன.
உடற்பயிற்சி செய்யாததாலும் அதிக அளவில் துரித உணவுகள் உண்பதாலும் வயிறு, கைகள், கால்கள் போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்கிறது.
பல பெண்கள் இது முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. அதிக உடல் எடை பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது. சிலர் மருந்துகளின் மூலம் அதிரடியாக உடல் எடையை குறைக்கின்றனர். இது தீங்கு விளைவிக்க கூடியதாகும். உணவு, தூக்கம் போன்றவற்றில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துதல் உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றால் படிப்படியாக எடையை குறைப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது.
உடல் எடையை குறைப்பதில் பருப்பு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. பருப்புகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கின்றன. பருப்பு வகைகள் உடல் எடையை அதிகரிக்கும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் தினமும் பருப்பு வகைகள் உண்பவர்களின் உடல் எடையில் பெரிதாக மாற்றம் ஏற்படுவது இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் உள்ள புரசச்சத்து, நார்ச்சத்து வைட்டமின்கள் தாது உப்புகள் போன்றவை எடை குறைப்பிற்கு அவசியமானவை.
மேலும் பருப்பு வகைகள் இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. அதிக பசி உண்டாகாமல் தடுப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.
பாதாமில் புரசச்சத்து ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை கெட்ட கொழுப்பு அதிகரிக்காமல் தடுக்கின்றன. இதன் மூலம் எடை சீரான அளவில் இருக்கும்.
பாதாமில் உள்ள அமினோ அமிலங்கள் இதயத்திற்கு நன்மை தருகின்றன. தினமும் நான்கு அல்லது 5 பாதாம் பருப்பு சாப்பிடுவது போதுமானது.
அக்ரூட் எனப்படும் வால்நட், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றுகிறது. இதில் ஓமேகா என்னும் சத்து அதிக அளவில் உள்ளது.
பிஸ்தாவில் குறைந்த அளவிலான புரதச்சத்து இருந்தாலும் அது தசை நார்களின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.
முந்திரியில் மக்னீசியம் மற்றும் புரதம் உள்ளது. இது வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. முந்திரியில் கலோரி அதிக அளவில் இருப்பதால் மிகக்குறைந்த அளவில் எடுத்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு பருப்பு வகைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவது மட்டுமில்லாமல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன.
Comments
Post a Comment