நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த ஒரு பொருளுடன் அத்திப்பழம் சாப்பிட்டால் குண்டாகிடுவீங்க...யாருக்கெல்லாம் எடை அதிகரிக்க வேண்டும்!

 தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது.


எடை குறைவாக இருப்பவர்கள் எப்படியாவது எடையை அதிகரித்து சிறப்பான தோற்றத்தை பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். 

அப்படிப்பட்டவர்கள் எப்படி உணவில் அத்திப்பழத்தினை சேர்த்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.


அத்திப்பழம் மற்றும் உலர்திராட்சை


10 உலர்திராட்சை மற்றும் 5 அத்திப்பழங்களைஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க செய்யலாம். உலர்திராட்சை எலும்பு, தோல், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

பால் மற்றும் அத்திபழம்


அத்திப்பழம் மற்றும் பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்கும்.

ஓட்ஸ்


விரைவாக உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், காலை உணவாக பால் மற்றும் அத்திப்பழங்களோடு சேர்த்து சிறிய அளவில் ஓட்ஸையும் உட்கொள்ளலாம்.

அத்தி மற்றும் பேரிச்சை


உடல் ஆரோக்கியமாக இருக்க ஆண்டு முழுவதும் பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம். இவை நிறைய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. அத்திப்பழம் மற்றும் பேரீச்சம்பழத்தால் செய்யப்பட்ட மில்க் ஷேக்கைக் குடிப்பதன் மூலமோ அல்லது அத்திப்பழம் மற்றும் பேரிச்சம்பழத்தை சேர்த்து செய்யப்பட்ட புட்டிங்கை சாப்பிடுவது விரைவாக உடல் எடையை அதிகரிக்க உதவும்.   



ALSO READ : ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ரெயின்போ டயட்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!