நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க..!!

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயத்தை அதிகரிக்கிறது.
எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் (Calcium) மற்றும் வைட்டமின் டி (Vitamin D ) நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிக மிக அவசியம். ஆனால், சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். அதனால், அந்த உணவுகளை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், குறைத்துக் கொள்வது நல்லது. எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


சோடியம் அதிகம் உள்ள உணவுகள்


அதிக அளவில் உப்பு உட்கொள்வதால் உடலில் கால்சியம் அளவு குறைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயத்தை அதிகரிக்கிறது. Osteoporosis என்பது ஒரு நோயாகும். இதில் எலும்புகள் பலவீனமடைந்து எளிதில் முறிவு ஏற்படும். ஆசியா பசிபிக் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், அதிக உப்பு சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இனிப்பான உணவுகள்


அதிக இனிப்பு சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிடும் நிலையில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு கிடைக்காத போது, ​​​​எலும்புகளில் இருந்து கால்ஷியம் உறிஞ்சப்பட்டு அவை, பலவீனமடைகின்றன.


காஃபின்


காஃபின் உட்கொள்வது பெண்களின் எலும்பு அடர்த்தியையும் குறைக்கும். காஃபின் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி பலவீனமடையச் செய்கிறது. காபியில் காஃபின் உள்ளதால், அளவுக்கு அதிகமாக காபி அருந்துவது நல்லதல்ல.


சோடா

அதிகமாக சோடா குடித்தால், அது உங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தையும் அதிகரிக்கிறது. தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், சோடாக்கள் குடிப்பதால், உடலில் உள்ள கால்ஷியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.


சிக்கன்


சிக்கன் அதிகம் சாப்பிடுவதும் எலும்புகளை சேதப்படுத்தும். விலங்கு புரதங்கள் இரத்தத்தை சிறிது அமிலமாக்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இரத்தத்தில் pH இன் மாற்றத்திற்கு உடல் உடனடியாக எதிர்வினையாற்றும் போது, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி அதனை சமன்படுத்துகிறது. இதனால் உடலில் கால்சியத்தின் அளவு குறையத் தொடங்குகிறது.


மது பானம்


2015 ஆம் ஆண்டு BMJ ஓபனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மது அருந்துவது எலும்பு அடர்த்தியை குறைக்கும் என்பதால், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மது அருந்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மதுவை முழுமையாக கை விட முடியவில்லை என்றால், குறைந்த பட்சம் அதனை குறைக்க முயற்சிக்கவும் என தேசிய ஆஸ்டியோபோரோசிஸ் அறக்கட்டளை அறிவுறுத்துகிறது..



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!